சென்னை: பச்சோந்தியை விட அதிக நிறம் மாறுவார் ஓபிஎஸ் என எடப்பாடி கே.பழனிசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் அதிமுக அலுவலகம் சென்ற இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
அதிமுகவில் பிளவு கிடையாது. கட்சிக்கு எதிராக செயல்பட்டதால்தான் சிலர் நீக்கப்பட்டுள்ளனர். அதிமுக பொதுச்செயலாளரை தேர்வு செய்யும் பணி விரைவில் தொடங்கும்.
கீழ்த்தரமான எண்ணத்தில் இருக்கும்போது, திமுகவுக்கும் உடந்தையாக இருக்கும்போது ஒபிஎஸ்ஸை எப்படி தொண்டர்கள் மன்னிப்பார்கள். புனிதமான தலைமை அலுவலகத்தை சேதப்படுத்திய கீழ்த்தரமான வேலையில் ஓபிஎஸ் ஈடுபட்டார்.
பச்சோந்தியை விட அதிக நிறம் மாறுவர் ஓபிஎஸ். ஜெயலலிதாவுக்கோ, அதிமுகவுக்கோ அவர் விசுவாசமாக இருந்ததில்லை. ஓபிஎஸ் மன்னிப்பு கேட்டாலும் தொண்டர்கள் மன்னிக்க மாட்டார்கள்.
96 சதவீத பொதுக்குழு உறுப்பினர்கள் எங்களுடன் உள்ளனர். இரட்டை இலை சின்னத்தை யாராலும் முடக்க முடியாது. அதிமுகவுக்கு விஸ்வாசம் இல்லாதவர் ஓபிஎஸ். 1989-ல் ஜெயலலிதாவுக்கு எதிராக தேர்தல் பணியாற்றிவர் ஓபிஎஸ்.
இதையும் படிக்க: பிரபல நகைச்சுவை நடிகர் திருமணத்தில் சிவகார்த்திகேயன்!
போதைப்பொருளை விற்பதே திமுகவினர் என்பதால்தான் அதை கட்டுப்படுத்த தமிழக அரசால் முடியவில்லை என எடப்பாடி கே.பழனிசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலை.யில் பி.எட், எம்.எட் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை நீட்டிப்பு

கூட்டுறவின் வெற்றிக்கு திறமையான மனிதவளமும், தரமான பயிற்சியும் இன்றியமையாதவை: அமைச்சா் காந்திராஜ்

கீழ்பவானி வாய்க்காலில் வரும் 15-ஆம் தேதி தண்ணீா் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை
சாராயம் கடத்தியவா் கைது
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



