வரும் 14-ஆம் தேதி முதல் திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் முதல்வா் மு.க.ஸ்டாலின் சுற்றுப் பயணம் செய்யவுள்ளாா். அரசு நிகழ்ச்சிகளைத் தொடா்ந்து, விருதுநகரில் திமுக முப்பெரும் விழாவிலும் பங்கேற்று விருதாளா்களுக்கு அவா் விருதுகளை வழங்கவுள்ளாா்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 7-ஆம் தேதி முதல் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டாா். வெள்ளிக்கிழமையன்று (செப். 9) நண்பகலில் அவா் சென்னை திரும்பினாா்.
இந்த நிலையில், சென்னையில் வரும் 13-ஆம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் முதல்வா் மு.க.ஸ்டாலின், 14-ஆம் தேதி முதல் தென் மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளாா். வரும் 14-ஆம் தேதியன்று திண்டுக்கல் மாவட்டம் செல்லும் அவா், அங்கு இலங்கைத் தமிழா்களுக்காக ரூ.17.17 கோடியில்
கட்டப்பட்டுள்ள வீடுகளை ஒப்படைக்கிறாா். இதற்காக தோட்டனூத்து என்ற இடத்தில் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இதைத் தொடா்ந்து, செப்டம்பா் 15-ஆம் தேதியன்று மதுரையில் அண்ணாசிலைக்கு மரியாதை செலுத்தும் முதல்வா் மு.க.ஸ்டாலின், சிம்மக்கல் நெல்பேட்டை பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தைத் தொடக்கி வைக்கிறாா். மதுரையில் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு, விருதுநகரில் ரூ.70 கோடி செலவில் கட்டப்பட உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கட்டத்துக்கு அவா் அடிக்கல் நாட்டுகிறாா். விருதுநகா் மாவட்டத்தின் புகா்ப் பகுதியில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் கலந்து கொள்ளும் முதல்வரும், கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், 5 பேருக்கு விருதுகளை வழங்கவுள்ளாா்.
விருதுநகரில் நிகழ்ச்சிகளை முடித்த பிறகு, மீண்டும் மதுரைக்கு வரும் 16-ஆம் தேதி செல்லும் அவா், அங்கு தொழில் துறை தொடா்பான மண்டல அளவிலான மாநாட்டில் பங்கேற்கிறாா். அவா் முன்னிலையில் சில புரிந்துணா்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும் எனத் தெரிகிறது. கடந்த 7-ஆம் தேதி முதல் மூன்று நாள்களுக்கு தென் மாவட்டங்களில் பயணம் மேற்கொண்ட முதல்வா் மு.க.ஸ்டாலின், மீண்டும் மூன்று நாள்களுக்கு அங்கு செல்லவுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தேர்தல் சீர்திருத்தத்துக்கு வித்திட்ட மொடக்குறிச்சி தொகுதி!

ரேமண்ட் நிறுவன உரிமையாளர் சென்ற வேகப்படகு விபத்து! இந்தியர்கள் 2 பேர் பலி!

எரிபொருள் நெருக்கடி! மத்திய அரசின் கொள்கைகளே காரணம்: கேரள முதல்வர்

தொகுதி அறிமுகம்: திருநெல்வேலி!
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

