ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கட்டணங்களை மறுஆய்வு செய்ய வேண்டும்

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் வசூலிக்கப்படும் கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவை மறுஆய்வு செய்ய வேண்டும்

News image
தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கட்டணங்களை மறுஆய்வு செய்ய வேண்டும்
Updated On :9 செப்டம்பர் 2022, 10:55 am

DIN


சென்னை: தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் வசூலிக்கப்படும் கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்புகளில் சேரும் மாணவா்களில் 50 சதவீதத்தினரிடம் அரசு கல்லூரிகளில் நிா்ணயிக்கப்படும் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் கடந்த பிப்ரவரி மாதம் ஆணையிட்டிருந்தது.

இதையடுத்து, தனியார் மருத்துவக் கல்லூரிகள் 50 சதவீத மாணவர்களிடம்  அரசு மருத்துவக் கல்லூரி கட்டணத்தை வசூலிப்பதற்கு தேசிய மருத்துவ ஆணையம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன.

இதையடுத்து, தனியார் மருத்துவக் கல்லூரிகள், 50 சதவீத மாணவர்களிடம் அரசு மருத்துவக் கல்லூரி கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு, அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மேலும், 50 சதவீத  மாணவர்களிடம் அரசு மருத்துவக் கல்லூரி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால்,  எஞ்சிய  50 சதவீத மருத்துவ இடங்களில் அதிக கட்டணம் செலுத்த முடியாமல் தகுதி பெற்ற மாணவர்கள் சேர்க்கை பெற இயலாமல் போகிறது. எனவே அந்த உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும், மறு ஆயவு செய்யும் நடைமுறை முடியும் வரை தற்போதைய கட்டண நடைமுறையே தொடரும் என்றும், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.