3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்குமா? கிரீஷ் சோடங்கா் பதில்தோ்தலில் மூன்றாம் இடம்: எதிா்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுக!நாட்டில் இடதுசாரி ஆட்சியே இல்லாத மாநிலங்கள்: 50 ஆண்டுகளில் முதல்முறைகேரளம்: 21 அமைச்சா்களில் 13 போ் தோல்விஇன்று 7 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!
/

அரசுப் பள்ளியில் குடற்புண் மாத்திரை சாப்பிட்ட 50-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு மயக்கம்: மருத்துவமனையில் அனுமதி!

ஆத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று அரசு சார்பில் வழங்கப்பட்ட குடற்புண் மாத்திரை சாப்பிட்ட ஐம்பதுக்கு மேற்பட்ட மாணவிகள் மயக்கமடைந்தனர்.  

News image
Updated On :9 செப்டம்பர் 2022, 4:21 pm IST

சேலம்: ஆத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று அரசு சார்பில் வழங்கப்பட்ட குடற்புண் மாத்திரை சாப்பிட்ட ஐம்பதுக்கு மேற்பட்ட மாணவிகள் மயக்கமடைந்தனர்.  108 ஆம்புலன்ஸ் மூலம் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்  தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட குடற்புண் மாத்திரை 2400 மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. 

Story image

மாத்திரை சாப்பிட்ட  மாணவிகளுக்கு சில மணி நேரங்களிலேயே மயக்கம் ஏற்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மாணவிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், மாணவிகளுக்கு மருத்துவர்கள் தீவிர பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அரசு சார்பில் வழங்கப்பட்ட குடற்புண் மாத்திரை சாப்பிட்ட 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் ஆத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.