கூத்தாநல்லூர்: இஸ்லாமியர்கள் பங்கேற்ற மஹா காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் இஸ்லாமியர்கள் பங்கேற்ற மத நல்லிணக்கத்துடன் மஹா காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
கூத்தாநல்லூர்: இஸ்லாமியர்கள் பங்கேற்ற மஹா காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் இஸ்லாமியர்கள் பங்கேற்ற மத நல்லிணக்கத்துடன் மஹா காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

சின்ன கூத்தாநல்லூர், சிவன் கோயில் தெருவில் எழுந்தருளியுள்ள சாலக்கரையாள் என்ற ஸ்ரீ மஹா காளியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, கோயில் அருகே யாகசாலை அமைக்கப்பட்டது. யாகசாலை மண்டபத்தில், கொளப்பாடு ஆர்.ஜெகன் சிவாச்சாரியார் தலைமையில், அகிலாண்டேஸ்வரி சமேத சுந்தரேஸ்வரர் கோயில் வி.ராஜசேகர சிவாச்சாரியார் மற்றும் கோயில் அர்ச்சகர் சாம்பு சேகர் பூசாரி உள்ளிட்டோர் விக்னேஸ்வர பூஜையுடன் யாக பூஜைகள் தொடங்கப்பட்டது. 

தொடர்ந்து,யாக பூஜையில் வெள்ளிக்கிழமை காலை பூர்ணாஹூதி செய்யப்பட்டு யாக சாலை மண்டபத்திலிருந்து புனித நீர் ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டது. காலை, 10.10 மணிக்கு, விமானக் கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. கும்பாபிஷேகத்தில், நகர மன்றத் தலைவர் மு.பாத்திமா பஷீரா, தமிழ் மாநில கட்டடத் தொழிலாளர்கள் மத்திய சங்க மாநில துணைத் தலைவர் ஆர்.சேகர், நகர மன்ற உறுப்பினர் பிரவீனா முத்துக்கிருஷ்ணன், காங்கிரஸ்  நகரத் தலைவர் சாம்பசிவம் மற்றும் இஸ்லாமியர்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். 

கும்பாபிஷேக ஏற்பாடுகளை, நகர்மன்ற உறுப்பினர் மாரியப்பன், சின்னக் கூத்தாநல்லூர் சிவன் கோயில் தெரு கிராம வாசிகள் மற்றும் பக்தர்கள் கவனித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com