அரக்கோணம்: அரக்கோணம் அருகே சனிக்கிழமை பள்ளி மாணவிகளை அழைத்து வந்து கொண்டிருந்த பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்தது. இதில் 10 மாணவிகள் உயிர் தப்பினர்.
அரக்கோணம் ஜோதி நகரில் உள்ள தனியார் பள்ளியின் பேருந்து சனிக்கிழமை பள்ளிக்கு மாணவிகளை ஏற்றிக்கொண்டு வரும்போது அரக்கோணம் அருகே உள்ள சேந்தமங்கலத்தில் காஞ்சிபுரம் - அரக்கோணம் நெடுஞ்சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்தது.
உடனடியாக பேருந்து நிறுத்தப்பட்டு மாணவிகளும் ஓட்டுநரும் நடத்துநரும் கீழே இறங்கினர். இச்சம்பவத்தில் பள்ளிப் பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானது. அரக்கோணம் தீயணைப்புத் துறையினர் நேரில் வந்து தீயை அணைத்தனர்.
இச்சம்பவம் குறித்து நெமிலி காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளிப் பேருந்து தீப்பற்றி எரிந்த சம்பவம் அரக்கோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கர - டிக்கெட் முன்பதிவு மந்தம்!
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30

துருவ நட்சத்திரம் வெளியீட்டுத் தேதி இதுவா?

கேரளத்தில் கனமழை! 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

