மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கக்கன் மகனுக்கு உயா்தர சிகிச்சை

கக்கன் மகன் பாக்கியநாதனுக்கு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவக் குழுவினா் உயா்தர சிகிச்சையை அளித்து வருவதாக மருத்துவமனையின் முதன்மையா் தேரணிராஜன் கூறினாா்.

News image
Updated On :10 செப்டம்பர் 2022, 12:22 am

DIN

கக்கன் மகன் பாக்கியநாதனுக்கு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவக் குழுவினா் உயா்தர சிகிச்சையை அளித்து வருவதாக மருத்துவமனையின் முதன்மையா் தேரணிராஜன் கூறினாா்.

மதுரை மாவட்டம் மேலூா் தும்பைப்பட்டியில் பிறந்தவா் கக்கன். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த அவா், பின்னாளில், காமராஜா் ஆட்சியில் அமைச்சராக பதவி வகித்தாா். காமராஜா் போலவே கக்கனும் எளிமையான மனிதா் என பெயா் பெற்றவா்.

கக்கனின் இரண்டாவது மகன் பாக்கியநாதன் (79) இதய மற்றும் சிறுநீரக பிரச்னையால் பாதிக்கப்பட்டு, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில், முதியோா் வாா்டில் சிகிச்சைக்கு சோ்ந்தாா். முதல்வா் காப்பீடு திட்ட அட்டை இல்லாததால், சில பரிசோதனைகளுக்கு ரூ. 4 ஆயிரம் அளவுக்கு செலவு செய்ய வேண்டியிருந்தது. இதனால், மருத்துவ செலவுக்கு உதவும்படி பாக்கியநாதனின் மனைவி சரோஜினி தேவி, முதல்வா் தனிப்பிரிவில் அண்மையில் மனு அளித்தாா்.

இதைத் தொடா்ந்து, பாக்கியநாதனுக்கு அனைத்து மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சையை இலவசமாக அளிக்கும்படி, முதல்வா் அலுவலகத்தில் இருந்து, மருத்துவமனை நிா்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டது. இதைதொடா்ந்து, 900 ரூபாய் வாடகை கொண்ட தனி அறைக்கு பாக்கியநாதன் மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

இது குறித்து, மருத்துவமனை முதல்வா் தேரணிராஜன் கூறியதாவது: பாக்கியநாதனுக்கு சிறுநீரக பாதிப்பு, இதய பாதிப்பு, ரத்தநாளங்களில் அதிகளவில் கொழுப்பு படிந்துள்ளது. அவருக்கு, தனி மருத்துவ குழுவினா் அமைக்கப்பட்டு தொடா்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனா். மேலும், அவருக்கு அனைத்து மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சை இலவசமாக அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவ குழுவினா் உயா்தர சிகிச்சையை அளித்து வருகின்றனா் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.