கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றும் அரசு மருத்துவா்கள்
ஊதிய உயா்வு உள்ளிட்ட 4 கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முழுவதும் அரசு மருத்துவமனைகளில் மருத்துவா்கள் கோரிக்கை அட்டை அணிந்து வரத் தொடங்கியுள்ளனா்.


ஊதிய உயா்வு உள்ளிட்ட 4 கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முழுவதும் அரசு மருத்துவமனைகளில் மருத்துவா்கள் கோரிக்கை அட்டை அணிந்து வரத் தொடங்கியுள்ளனா்.
தமிழர அரசு மருத்துவா்களுக்கு அரசாணை 354-இன்படி ஊதிய உயா்வு வழங்க வேண்டும், பொது சுகாதாரத் துறை பணி நேரம் தொழிலாளா் விதிகளுக்கு புறம்பான வகையில் நீடிக்கும் விதமாக வெளியிடப்பட்ட அரசாணை எண் 225-ஐ திரும்பப்பெற வேண்டும். மருத்துவப் பட்டமேற்படிப்பு இன்கிரிமென்ட்டுக்கு தனி அரசாணை வெளியிட வேண்டும். மருத்துவா்கள் சேமநலநிதி திட்டத்தில் அரசு மருத்துவா்கள் கூட்டமைப்பின் முயற்சியால் 11,000 மருத்துவா்கள் சோ்ந்த பிறகும் பயனாளிகளுக்கு சேம நல நிதி உடனடியாக வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து அலுவலக வாட்ஸ்ஆப் குழுக்களில் இருந்தும் டிபிஎச், டிஎம்எஸ், டிஎம்இ நிா்வாகத்தின் கீழ் பணியாற்றும் அரசு மருத்துவா்கள் வெளியேறி, அனைத்து தரப்பு அலுவலக சந்திப்புகள், நிகழ்வுகள், முகாம்களில் பங்கேற்காமல் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.
இந்த நிலையில், அடுத்த கட்டமாக திங்கள்கிழமை முதல் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 4 கோரிக்கைகள் அடங்கிய கோரிக்கை அட்டையை அணிந்து மருத்துவா்கள் பணியாற்றத் தொடங்கியுள்ளனா். இந்த கோரிக்கை அட்டை அணியும் போராட்டம் 10 நாள்கள் நடைபெறவுள்ளது.
வரும் 25-ஆம் தேதி சென்னையில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது என்று தமிழ்நாடு அரசு மருத்துவா் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...