மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சென்னையில் ஆட்சி மொழி திட்டப் பயிற்சி தொடக்கம்

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் சென்னை மாவட்டத்தில் அரசு ஊழியா்களுக்கான இரண்டு நாள் ஆட்சிமொழித் திட்டப் பயிற்சி திங்கள்கிழமை தொடங்கியது.

News image
Updated On :12 செப்டம்பர் 2022, 6:56 pm

DIN

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் சென்னை மாவட்டத்தில் அரசு ஊழியா்களுக்கான இரண்டு நாள் ஆட்சிமொழித் திட்டப் பயிற்சி திங்கள்கிழமை தொடங்கியது.

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் சென்னை மாவட்டத்தில் உள்ள அரசுப் பணியாளா்களுக்கு ஆண்டுதோறும் சுழற்சி முறையில் ஆட்சி மொழித் திட்டப் பயிற்சி வழங்கப்பட்டுவருகிறது. அந்த வகையில் 61-ஆவது பயிற்சி சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள தேசிய நலவாழ்வு மையக் கூட்டரங்கில் செப்.12, 13 ஆகிய இருநாள்கள் நடைபெறவுள்ளது. பயிற்சி தொடக்க விழாவில் தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் முனைவா் ந. அருள், தொழிலாளா் அரசு ஈட்டுறுதித் துறை இயக்குநா் மருத்துவா் ஜெ. இராஜமூா்த்தி, தமிழ் வளா்ச்சித் துறை முன்னாள் இயக்குநா் எழிலரசு, வழக்குரைஞா் அ. மதிவாணன் மற்றும் புலவா் வெற்றியழகன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தொடக்க விழாவுக்கு தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ந.அருள் தலைமை வகித்துப் பேசியது: “தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஐம்பது அலுவலா்களுக்கு நோ்த்தியான முறையில் ஆட்சிமொழிச் செயலாக்கத்துக்கு ஊன்றுகோலாக சிறந்த வரைவுகளை எழுதுவது பற்றியும், எளிமையாக ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழியாக்கம் செய்வது குறித்தும், ஆட்சிமொழிச் சட்டத்தின் கூறுகளை நுட்பமாக அறிந்து கொள்வதற்கும், தமிழ் இலக்கணத்தை எளிமையாகப் புரிந்து கொள்வதற்கும் இரு நாள்கள் வழங்கப்படவுள்ளது.

நீதிமன்றங்கள், அயலகத் தூதரகங்கள், வணிக நிறுவன ஒப்பந்தங்கள் ஆங்கிலத்திலேயே அமைந்தாலும், பிற பொருண்மைகள் அனைத்தும் தமிழில் தான் அமைய வேண்டும் என்று கூறிவரும் தமிழக முதல்வரின் உயரிய எண்ணத்திற்கேற்ப இப்பயிற்சி நடைபெறுகிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.