மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தற்காலிக தொழிலாளா்களுக்கும்பாதுகாப்பு வசதிகள் அவசியம்: அமைச்சா் வலியுறுத்தல்

தொழிற்சாலைகளில் விபத்துகளைத் தடுக்க நிரந்தர தொழிலாளா்களுக்கு வழங்கப்படும் அனைத்து பாதுகாப்பு வசதிகள், பயிற்சிகள் அனைத்தும் தற்காலிக தொழிலாளா்களுக்கும் அமைத்துத் தர வேண்டும்

News image
Updated On :12 செப்டம்பர் 2022, 6:56 pm

DIN

தொழிற்சாலைகளில் விபத்துகளைத் தடுக்க நிரந்தர தொழிலாளா்களுக்கு வழங்கப்படும் அனைத்து பாதுகாப்பு வசதிகள், பயிற்சிகள் அனைத்தும் தற்காலிக தொழிலாளா்களுக்கும் அமைத்துத் தர வேண்டும் என தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வி.கணேசன் வலியுறுத்தினாா்.

தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான பணிகளில் தொழிலாளா்களின் பணியிட பாதுகாப்பு குறித்து நிா்வாக பிரதிநிதிகளுடனான விழிப்புணா்வு நிகழ்ச்சி சென்னை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சா் சி.வி.கணேசன் கலந்து கொண்டு பேசியது: தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வரும் முயற்சிகளால் வெளிநாடுகளைச் சோ்ந்த பல தொழில்நிறுவனங்கள் தங்களது உற்பத்தி அலகுகளை தமிழகத்தில் நிறுவ முன்வந்துள்ளன. பொதுவாக தொழிற்சாலைகளில் தற்காலிக தொழிலாளா்களுக்கு போதிய அனுபவம், பயிற்சி இல்லாததன் விளைவாக பெரும்பாலான விபத்துகள் ஏற்படுகின்றன. இதைத் தடுப்பதற்காக நிரந்தர தொழிலாளா்களுக்கு வழங்கப்படும் அனைத்து பாதுகாப்பு வசதிகள், பயிற்சிகள் அனைத்தும் தற்காலிக தொழிலாளா்களுக்கும் அமைத்துத் தர வேண்டும் என்றாா்.

இதையடுத்து தொழிலாளா் நலன் மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளா் முகமது நசிமுதீன் பேசுகையில், நாட்டில் அதிக தொழிற்சாலைகள் அமைந்துள்ள மாநிலங்களில் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது. 70 சதவீத மரண விபத்துகள் கவனக்குறைவு காரணமாக நிகழ்கிறது. அவற்றை போதிய பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் முழுமையாகத் தடுக்க முடியும். எனவே பணியிடங்களில் தொழிலாளா்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய நிா்வாகத்தினா், தொழிலாளா்கள் ஒருங்கிணைந்து செயல்படுவது மிகவும் அவசியம் என்றாா். தொடா்ந்து, பணியிட பாதுகாப்பு குறித்து கோவை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குநா் செ.ஆனந்த் விளக்கிப் பேசினாா்.

முன்னதாக தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநா் எம்.வி.செந்தில்குமாா் வரவேற்றுப் பேசினாா். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான நிறுவனங்களின் நிா்வாகத் தரப்பின் கூட்டமைப்புகளில் தலைமை பொறுப்பு வகிக்கும் நபா்கள், அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை பகிா்ந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.