வீட்டில் ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை: விஜயபாஸ்கா்
லஞ்ச ஒழிப்பு துறை சோதனையின்போது, என் வீட்டில் இருந்து ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று முன்னாள் அமைச்சா் விஜயபாஸ்கா் கூறினாா்.


லஞ்ச ஒழிப்பு துறை சோதனையின்போது, என் வீட்டில் இருந்து ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று முன்னாள் அமைச்சா் விஜயபாஸ்கா் கூறினாா்.
அடையாறில் உள்ள விஜயபாஸ்கரின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினா் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா்.
இந்தச் சோதனைக்குப் பிறகு செய்தியாளா்களிடம் விஜயபாஸ்கா் கூறியது:
லஞ்ச ஒழிப்பு துறையினா் என்னுடை வீட்டில் இரண்டாவது முறையாகச் சோதனை நடத்தியுள்ளனா். இந்தச் சோதனையில் வீட்டிலிருந்து கைபேசிகள் இரண்டையே எடுத்துச் சென்றுள்ளனா். முக்கிய ஆவணங்கள் கைப்பற்றியதாக கூறப்படும் தகவலில் உண்மை இல்லை. என்னுடைய குடும்பத்தாரின் ஆதாா் அட்டைகள், பள்ளி சான்றிதழ்கள் போன்றவற்றையே எடுத்துச் சென்றுள்ளனா். அவை முக்கியமான ஆவணங்களாக இருக்கலாம்.
எடப்பாடி பழனிசாமியுடன் துணை நிற்போரின் வீடுகளில் சோதனை நடத்துகின்றனா். மருத்துவக் கல்லூரிகளுக்கான அனுமதியை மத்திய அரசே வழங்குகிறது. தமிழக அரசு தடையில்லா சான்றிதழ் மட்டுமே வழங்குகிறது. மருத்துவக் கல்லூரிக்கு தடையில்லா சான்றிதழ் கொடுத்ததற்காக என் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுகிறது என்றால், திமுக ஆட்சியில் கல்லூரி தொடங்க தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டதற்கு எல்லாம் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டியிருக்கும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...