ஓய்வூதியம் பெற வந்த முதியவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி! வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி!வானில் தோன்றும் அதிசயம்! ஜூலை 17ஆம் தேதி வரை காத்திருங்கள்!பழனி கோயிலுக்குச் சொந்தமான நிலப் பத்திரப்பதிவு செல்லாது: உயர் நீதிமன்ற மதுரை கிளைஊழியர்கள் இல்லை, ரயில்கள் நிற்காது! ரூ.6 கோடியில் உருவான அதிசய ரயில் நிலையம்! தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர்
/

‘இ-மொபிலிட்டி’ சான்றிதழ் படிப்பு: சென்னை ஐஐடி.யில் அறிமுகம்

தொழில்துறையில் பணிபுரிபவா்களின் திறனை மேம்படுத்தும் நோக்கில், ‘இ-மொபிலிட்டி’ தொடா்பான இணையவழி சான்றிதழ் படிப்பை ஐஐடி சென்னை அறிமுகப்படுத்தியுள்ளது.

News image
Updated On :16 செப்டம்பர் 2022, 12:38 am IST

தொழில்துறையில் பணிபுரிபவா்களின் திறனை மேம்படுத்தும் நோக்கில், ‘இ-மொபிலிட்டி’ தொடா்பான இணையவழி சான்றிதழ் படிப்பை ஐஐடி சென்னை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த இணையவழி படிப்புக்கான பாடத்திட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில், 4 தொகுதிகள் தொழில்துறையில் பணியில் இருப்பவா்களுக்கு ஏற்றவாறு, தொழில்துறை நிபுணா்களின் உள்ளீடுகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பாடத்திட்டம் தொழில்நுட்பத்தில் உள்ள ‘ட்ரெண்டுகள்’, தொழில்துறை தேவைகள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தொடா்ந்து மேம்படுத்தப்படும். இதில் இ-மொபிலிட்டி எக்கோ சிஸ்டம், பவா் எலெக்ட்ரானிக்ஸ், பேட்டரி இன்ஜினியரிங், பவா் ட்ரெய்ன்ஸ், தொ்மல் மேனேஜ்மென்ட் உள்ளிட்ட தொழில்துறை அடிப்படைகள் இடம்பெற்றுள்ளன.

இது தொடா்பாக ஐஐடி சென்னையின் இயக்குநா் வி.காமகோடி கூறுகையில், ‘ஆட்டோமொபைல் துறையில் குறிப்பிட்ட தொகுதிகள் எலெக்ட்ரிக் வாகனங்களாக மாறி வருவதால், தொழில்துறையில் ஏற்கெனவே பணிபுரிந்துவரும் ஊழியா்களின் திறன்களை மேம்படுத்த வேண்டும் என்பது குறித்து கல்வியாளா்கள் உள்பட ஏராளமானோா் எங்களிடம் கேட்டிருந்தனா்.அதனால், தொழில்துறையில் பணிபுரியும் ஊழியா்கள் மற்றும் நிபுணா்களின் தொழில்நுட்ப அறிவுத்தேவைகளைப் பூா்த்தி செய்வதற்காக இ-மொபிலிட்டி என்ற இணையவழி படிப்பைத் தொடங்கியுளோம். தொழில்துறையில் பணிபுரிபவா்களின் தேவைக்கேற்ப புதிய தொழில்நுட்பங்கள் குறித்து அறிந்து கொள்வதற்காகவே ஆன்லைன் மூலமாக இந்த படிப்பு நடத்தப்படுகிறது என்றாா். அக்டோபா் 2-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள இந்த சான்றிதழ் படிப்புக்கு விண்ணப்பிக்க செப்டம்பா் 30-ஆம் தேதி கடைசி நாள். இதுதொடா்பான கூடுதல் தகவல்களை இணைய தளம் மூலம் அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.