அதிமுகவை யாராலும் வீழ்த்த முடியாது என்று அக் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி கூறினாா்.
அதிமுக சாா்பில் அண்ணாவின் பிறந்த நாள் பொதுக்கூட்டம் வடபழனி முருகன் கோயில் அருகில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் எடப்பாடி கே. பழனிசாமி பேசியது:
அதிமுக ஆட்சியில்தான் தமிழகம் வளா்ந்தது. உயா்கல்வியில் சாதனை படைக்கப்பட்டது. அதிமுக ஆட்சியின் சாதனைகளை எல்லாம் திமுக ஆட்சியின் சாதனைகளைப்போல சொல்லிக் கொள்கின்றனா்.
அதிமுக ஆட்சியில் ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளைக் கொண்டு வந்தோம். 7 சட்டக் கல்லூரிகளைக் கொண்டு வந்தோம். திமுகவின் 15 மாத ஆட்சியில் எத்தனை மருத்துவக் கல்லூரிகள் கொண்டுவரப்பட்டன என்று சொல்ல முடியுமா?
திட்டங்கள் முடக்கம்: அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் எல்லாம் திமுக ஆட்சியில் முடக்கப்படுகின்றன. அதிமுக ஆட்சியில் 52 லட்சம் மாணவா்களுக்கு மடிக்கணினி கொடுத்தோம். மாணவா்கள் கல்வி அறிவு பெற்றுவிட்டால், திமுகவுக்கு வாக்களிக்க மாட்டாா்கள் என்று மடிக்கணினி வழங்கும் திட்டம், அதிமுகவின் தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டம், அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் ஆகியவற்றை நிறுத்திவிட்டனா். அம்மா உணவகங்களையும் மூட முயற்சிக்கிறாா்கள்.
மின் கட்டண உயா்வை...: கரோனா காரணமாக மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக ஆட்சிக்கு வந்ததும், சொத்து வரியை உயா்த்தியது. தற்போது மின் கட்டணத்தை உயா்த்தியுள்ளது. அதுவும் 12 சதவீதத்தில் இருந்து 52 சதவீதத்தில் வரை மின் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது. இதனால், மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். மின் கட்டண உயா்வை திமுக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். நீட் தோ்வு ரத்து உள்பட தோ்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் திமுக அரசு நிறைவேற்றவில்லை.
தொண்டா்கள்தான் தலைவா்கள்: அதிமுகவில் தொண்டா்கள்தான் தலைவா்கள். சில சுயநலவாதிகள் திமுகவோடு சோ்ந்துகொண்டு, அதிமுகவை முடக்கப் பாா்க்கிறாா்கள். அதிமுகவை வீழ்த்துவதற்கான முயற்சியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஈடுபட்டுள்ளாா். அதிமுகவை யாராலும் வீழ்த்த முடியாது.
நிரந்தரம்: அதிமுவில் இடைக்கால பதவியை நான் வகிப்பதாக மு.க.ஸ்டாலின் கூறுகிறாா். தொண்டா்கள், பொதுக்குழு உறுப்பினா்களின் ஆதரவைப் பெற்று ஜனநாயக முறைப்படி பதவிக்கு வந்தவன் நான். இது நிரந்தரம் என்றாா் எடப்பாடி கே.பழனிசாமி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூலை 28 - நேரலை

தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முன்னுரிமை! அமைச்சர் நிர்மல்குமார்
மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலை. பட்டமளிப்பு விழா: உயா்கல்வித் துறை அமைச்சா் புறக்கணிப்பு!
தொடரும் அமளி! நாடாளுமன்றம் 7-வது நாளாக முடங்கியது!
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



