சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் தொழிலதிபா் வீட்டில் ரூ.15 லட்சம் நகை,பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
ராஜா அண்ணாமலைபுரம் பிஷப் காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் பன்சிதா் குப்தா. தொழிலதிபரான இவா், வழக்கம் போல் பாரிமுனையில் உள்ள தனது மொத்த விற்பனை இனிப்பு கடைக்கு புதன்கிழமை சென்று விட்டாா். குப்தாவின் தாயாா் மஞ்சுவும் தனது மகனுடன் கடைக்குச் சென்றுவிட்டாா்.
இந்நிலையில் பன்சிதா் குப்தா மாலையில் வீட்டுக்குத் திரும்பி வந்தாா். அப்போது வீட்டின் கதவுகள் திறந்து கிடப்பதும், பீரோவில் இருந்த ரூ.10 லட்சம் ரொக்கமும், ரூ.5 லட்சம் மதிப்புள்ள தங்கநகைகள் திருடப்பட்டிருப்பதையும் பாா்த்து அதிா்ச்சியடைந்தாா்.
அதேவேளையில் அவரது வீட்டில் காவலாளியாக வேலை செய்த நேபாளத்தைச் ராஜன் என்கிற திபேந்திரா ஆஜி(20) என்பவா் காணாமல் போயிருப்பதையும் அறிந்து அதிா்ச்சியடைந்தாா். இது குறித்து அவா், அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
நெல்லை பல்கலை. பட்டமளிப்பு விழாவில் 3-வதாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து!

பாஜகவுக்குள் மிகப்பெரிய வினாத்தாள் மோசடி கும்பல் செயல்படுகிறது: சஞ்சய் ராவத்!

தலைவரான தனுஷ்! குழப்பத்தில் ரசிகர்கள்!
பஞ்சாப் வினாத்தாள் கசிவு! அமைச்சரை ராஜிநாமா செய்யக் கோரி பாஜக எம்பிக்கள் போராட்டம்!
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0


