பஞ்சாப் மாநில அரசுத் தேர்வில் வினாத்தாள் கசிந்த குற்றச்சாட்டுக்கு பொறுப்பேற்று, அம்மாநில கல்வி அமைச்சரை ராஜிநாமா செய்யக் கோரி நாடாளுமன்றத்தில் பாஜக எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக சிஜேபி போராட்டத்தை தொடர்ந்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடந்த வாரம் பதவியை ராஜிநாமா செய்தார்.
இந்த நிலையில், பஞ்சாப் மாநில அரசு நடத்திய மருந்தக அதிகாரிகள் தேர்வில் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக தேர்வர்கள் உள்பட 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று பஞ்சாப் கல்வித் துறை அமைச்சர் ஹர்ஜோத் சிங் பைன்ஸை பதவி விலகக் கோரி நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்பிக்கள் நேற்று போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில், பாஜக எம்பிக்கள் இன்று காலை பதாகைகளுடன் போராட்டம் நடத்தினர். பஞ்சாப் மாநிலத்தை ஆளும் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால், முதல்வர் பகவந்த் மான் ஆகியோருக்கு எதிராகவும் முழக்கமிட்டனர்.
Summary
Punjab question paper leak! BJP MPs protest demanding the Minister's resignation!
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்!

அனைத்து மாவட்டங்களிலும்..! நாளை நாடு தழுவிய போராட்டம் நடத்த சிஜேபி அழைப்பு!

நீட் வினாத்தாள் கசிவு! 21வது நாளாக கரப்பான்பூச்சி மக்கள் கட்சி போராட்டம்!

விடையோடு அச்சிடப்பட்ட வினாத்தாள்! பரபரப்பின் உச்சியில் கேரள பல்கலை.
விடியோக்கள்

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மாணவர்கள் கண்ணீர்



