மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

ராமசாமி படையாச்சியார் பிறந்தநாள்: தமிழக அரசு சார்பில் மரியாதை

சுதந்திரப் போராட்ட தியாகி ராமசாமி படையாச்சியாரின் பிறந்தநாளையொட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. 

News image
Updated On :16 செப்டம்பர் 2022, 7:54 am

DIN

சுதந்திரப் போராட்ட தியாகி ராமசாமி படையாச்சியாரின் பிறந்தநாளையொட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. 

சுதந்திரப் போராட்ட வீரர் எஸ்.எஸ். ராமசாமி படையாச்சியாரின் 105 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி சென்னை ஹிந்தி ஹால்டா அருகில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். 

ராமசாமி படையாச்சியார், தமிழக அமைச்சரவையிலும்  நாடாளுமன்ற மக்களவையிலும் உறுப்பினராக இருந்தவர்.

ராமசாமி படையாச்சியார் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், 'விடுதலைப் போராட்ட வீரராக நாட்டின் விடுதலைக்கும், பின்னாளில் அமைச்சராக மாநிலத்தின் வளர்ச்சிக்கும், சமூகநீதிக் களத்தில் வன்னியர் சமுதாயத்தின் முன்னேற்றத்துக்காகவும் பாடுபட்ட எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சியார் அவர்களின் பிறந்தநாளில் அவரது பங்களிப்புகளை நினைவுகூர்ந்து வணங்குகிறேன்' என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.