கம்பத்தில் பெரியார், மோடி பிறந்தநாள்: பாஜக-திக மோதல்; 20 பேர் கைது
தேனி மாவட்டம் கம்பத்தில் பெரியார் மற்றும் நரேந்திர மோடி பிறந்த நாளை கொண்டாடுவதில் பாஜக திகவினரிடையே மோதல் ஏற்பட்டதால் பதற்ற நிலை உருவானது, பாஜகவினர் 20 பேர் கைது செய்யப்பட்டனர்.


தேனி மாவட்டம் கம்பத்தில் பெரியார் மற்றும் நரேந்திர மோடி பிறந்த நாளை கொண்டாடுவதில் பாஜக திகவினரிடையே மோதல் ஏற்பட்டதால் பதற்ற நிலை உருவானது, பாஜகவினர் 20 பேர் கைது செய்யப்பட்டனர்.
தேனி மாவட்டம் கம்பம் காந்தி சிலை திடலில் திராவிடர் கழகம் சார்பில் பெரியார் பிறந்த நாள் கொண்டாட பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டது. திராவிடர் கழக நிர்வாகிகள் கூடியிருந்தனர்.
அப்போது அங்கு பாரதிய ஜனதா கட்சியினர் பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் கொண்டாட வந்தனர், அவர்கள் அங்குப் பாதுகாப்பிற்கு இருந்த போலீசாரிடம் காந்தி சிலை அருகே தேரடி மற்றும் கோயில் உள்ளது, இங்குப் பிறந்தநாள் கொண்டாடக்கூடாது என்றனர். இந்நிலையில் திக கூட்டத்தில் கலந்துகொள்ள திமுக, கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சியினர் வந்தனர்.
_.jpeg)
அவர்கள் போலீசாரிடம் பிறந்தநாள் விழா கொண்டாட அனுமதி வாங்கியுள்ளோம் என்று கூறி பாஜகவினரை கண்டித்துக் கோஷமிட்டனர், பதிலுக்கு திக மற்றும் திமுக, கம்யூனிஸ்டு கட்சியினரை கண்டித்து பாஜகவினர் கோஷமிடவே, இருதரப்பும் எதிர் எதிராக நின்றதால் பரபரப்பு உண்டாகி மோதல் போக்கு ஏற்பட்டது.
பின்னர் கம்பம் கூடலூர் நெடுஞ்சாலையில் திமுக உள்ளிட்ட கட்சியினர் சாலை மறியல் செய்தனர். அதைப் போல பாஜகவினரும் சாலை மறியலில் ஈடுபட்டதால் பிரதான சாலையே களேபரமானது.
இந்நிலையில் திக கூட்டம் நடத்த போலீசார் அனுமதி வழங்கினர். மேலும் சாலை மறியலில் ஈடுபட்ட பாஜக நகர தலைவர் பி.ஈஸ்வரன் மற்றும் நிர்வாகிகள் சென்றாயன், அழகேசன், பழனிக்குமார், இந்து முன்னணி மாவட்டச் செயலாளர்கள் ராமகிருஷ்ணன், சசிக்குமார் உள்ளிட்ட 20 பேர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...