மேட்டூர் அணை நிலவரம்!
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு ஞாயிற்றுக்கிழமை காலை வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடியாக சரிந்தது.


மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு ஞாயிற்றுக்கிழமை காலை வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடியாக சரிந்தது.
காவிரியின் நீர் பிடிப்புர் பகுதிகளில் பெய்து வரும் மழையின் அளவு படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் உபரி நீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது. கர்நாடக அணைகளின் உபரி நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு ஞாயிற்றுக்கிழமை காலை வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடியாக சரிந்தது.
நீர்வரத்து குறைந்ததால் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
சுரங்க மின் நிலையம் மற்றும் அணை மின் நிலையம் வழியாக வினாடிக்கு 23 ஆயிரம் கனஅடி நீரும், உபரி நீர் போக்கி வழியாக வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணையின் கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சி ஆகவும் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...