இந்து சமய அறநிலையத் துறை பதிப்புப் பிரிவுக்கு ஆலோசகர் நியமனம்

இந்து சமய அறநிலையத் துறை பதிப்புப் பிரிவின் ஆலோசகராக கவிஞர் தென்னம்பட்டு ஏகாம்பரம் நியமிக்கப்பட்டுள்ளார். 
கவிஞர் தென்னம்பட்டு ஏகாம்பரம்
கவிஞர் தென்னம்பட்டு ஏகாம்பரம்
Published on
Updated on
1 min read

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை பதிப்புப் பிரிவின் ஆலோசகராக கவிஞர் தென்னம்பட்டு ஏகாம்பரம் நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் ஆன்மிக நூல்கள் வெளியிடுவதற்காகப் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பதிப்பகப் பிரிவு ஆலோசகராக கவிஞர் தென்னம்பட்டு ஏகாம்பரத்தை தமிழக அரசு நியமனம் செய்துள்ளது.

தென்னம்பட்டு ஏகாம்பரம், இந்து சமய அறநிலையத் துறையில் திருக்கோயில் நிர்வாக அலுவலர் மற்றும் உதவி ஆணையராக பணியாற்றியவர்.  பணி ஓய்வுக்குப் பிறகு அரசின் சிறப்பு உத்தரவின்படி துறை வெளியீடான "திருக்கோயில்" இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார்.

கவிதைகள், ஆன்மிகம் குறித்த நூல்கள் பல எழுதியுள்ளார். கவிஞர், எழுத்தாளர் என்பதுடன் அழுத்தமான ஆன்மிக சிந்தனை முத்திரை பெற்ற நூல்களைப் படைப்பவர் எனத் தமிழ் எழுத்தாளர் உலகில் அறியப் பெற்றிருப்பவர்.

முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி, கவியரசர் கண்ணதாசன், திராவிட இயக்க முன்னோடியும், முன்னாள் சட்டப்பேரவைத் தலைவருமான புலவர் கா.கோவிந்தன், முதுபெரும் தமிழறிஞர் பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் முதலான தமிழறிஞர்களின் அரவணைப்பில் வளர்ந்தவர். 

முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நேரடிப் பார்வையில் "முரசொலி" நாளேட்டில் துணை ஆசிரியராகவும் (1972-1975) பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com