அக்டோபர் 2-ல் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் தலைமை ஆசிரியர் பங்கேற்க வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் , மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோருக்கு பள்ளிக்கல்வி ஆணையர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
அக்டோபர் 2-ஆம் தேதி நடைபெற இருக்கும் கிராம சபை கூட்டத்தில் பள்ளியின் சார்பில் தலைமையாசிரியர். பள்ளி மேலாண்மைக் குழுவின் தலைவர், உறுப்பினர்கள் கலந்து கொண்டு நடந்து முடிந்த பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தில் பள்ளி வளர்ச்சி, கற்றல் கற்பித்தல் போன்றவை தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானங்களைப் பகிர்ந்து கொண்டு விவாதிக்க வேண்டும்.
பள்ளியின் தலைமையாசிரியர், பள்ளி மேலாண்மைக் குழுவின் தலைவர், உறுப்பினர்கள் தங்கள் பள்ளியின் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட் டத்தில் பள்ளி வளர்ச்சி, கற்றல் கற்பித்தல் போன்றவை தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானங்களை முறைப்படி தொகுத்து வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இடைநிற்றல், மாணவர் சேர்க்கை, கற்றல், கற்பித்தல், பள்ளி உட்கட்டமைப்பு, மாணவர் பாதுகாப்பு தொடர்பான தீர்மானங்களை முறைப்படி தொகுத்து கிராம சபைக் கூட்டத்தில் ஆலோசனைகளுக்காக சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அக்டோபர் 2ஆம் தேதி நடைபெறும் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் இத்தீர்மானங்களைப் பகிர்ந்து கொண்டு அது தொடர்பான ஆலோசனைகளை மேற்கொண்டு தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும்.
5. கிராம சபை கூட்டத்தில் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்ட தீர்மானங்களைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் கிராம மக்கள் தங்கள் பள்ளி சார்ந்த பிரச்சனைகள் மற்றும் தேவைகளை அறிந்துகொண்டு தங்களின் பங்களிப்பை அளிக்க இயலும். மேலும் கிராமப் பஞ்சாயத்துக்கள் பள்ளி வளர்ச்சிக்கு உறுதுணையாகச் செயல்பட முடியும்.
கிராம சபை கூட்டத்தில், பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்ட தீர்மானங்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானங்களை,முடிவுகளை இம்மாதம் கடைசி வெள்ளிக் கிழமை நடைபெறும் பள்ளி மேலாண்மைக்குழுக் கூட்டத்தில் கலந்தாலோசிக்க வேண்டும்.
இதையும் படிக்க: நாயை காரில் கட்டி இழுத்துச் சென்ற மருத்துவர்: வைரலாகும் விடியோ
மேற்காணும் அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்ட தீர்மானங்களை கிராம சபை கூட்டத்தில் பகிர்ந்து கொண்டு விவாதிக்க தலைமையாசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர்,உறுப்பினர்களை அறிவுறுத்துமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் , மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! அமெரிக்கா - ஈரான் ஒப்பந்தத்தை பாதிக்கிறதா?

ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு

பேரவையில் கட்சித் தலைவர்களின் துதிபாடல்தான் நடக்கிறது! பிரேமலதா

ஸ்லோவாக்கியா நாடாளுமன்றத் தலைவருக்கு இந்தியாவின் பாரம்பரிய உணவைப் பரிசளித்த பிரதமர் மோடி!
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



