/

பழங்கரை ஊராட்சியில் குடிநீர் கேட்டு சாலை மறியல்

அவிநாசி அருகே பழங்கரை ஆயிக்கவுண்டம்பாளையம் பகுதியில் குடிநீர் வழங்கக் கேட்டு, அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
Updated On :1 பிப்ரவரி 2024, 10:21 am

DIN

அவிநாசி: அவிநாசி அருகே பழங்கரை ஆயிக்கவுண்டம்பாளையம் பகுதியில் குடிநீர் வழங்கக் கேட்டு, அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம், பழங்கரை ஊராட்சிக்கு உள்பட்ட ஆயிக்கவுண்டம்பாளையத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதிக்கு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக குடிநீர் வழங்கபடவில்லை. 

இது குறித்து பலமுறை தெரியப்படுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் மலையப்பாளையம்-அவிநாசி சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தகவலறிந்து சம்பவயிடத்திற்கு வந்த ஊராட்சி நிர்வாகத்தினர், காவல் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.