இந்த கட்டியை அகற்றிக்கொள்ள வாழப்பாடியில் பருத்தி மண்டி அருகே இயங்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு, மருத்துவர் இந்துமதி ஆனந்த் தலைமையிலான மருத்துவக் குழுவினர், புதன்கிழமை மாலை தொடர்ந்து 3 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து, வயிற்றில் இருந்த 6 கிலோ எடை கொண்ட கட்டியை அகற்றினர். அறுவை சிகிச்சைக்கு பின் குள்ளப்பட்டு நலமாக உள்ளார். ஓரிரு நாள்களில் பூரண குணமடைந்து வீடு திரும்புவார். இவரது வயிற்றில் இருந்து அகற்றப்பட்ட கட்டி "பயாப்சி" பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவில் இந்த கட்டியின் தன்மை குறித்து தெரிய வரும். தேவைப்பட்டால் தொடர் சிகிச்சை அளிக்கப்படுமென, மருத்துவ குழுவினர் தெரிவித்தனர்.