

மொழியால் இணைந்தவர்களை சாதி, மதத்தால் பிரிக்க முடியாது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்ப் பரப்புரைக் கழகம் என்கிற திட்டத்தை சென்னையில் தொடக்கி வைத்து முதல்வர் பேசியதாவது, தமிழ் வெறும் மொழியல்ல, அது நம் உயிர், தமிழை தமிழே என்று அழைப்பதில் உள்ள சுகம் வேறு எதிலும் இல்லை. அனைவருக்குமான வளர்ச்சி என்பதே திராவிட மாடல் ஆட்சி. அண்ணா பெயரால் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பரப்புரைக் கழகம் தொடங்கப்படுவது பொருத்தமானது.
இதையும் படிக்க- தமிழ்ப் பரப்புரைக் கழகத்தை தொடங்கி வைத்தார் முதல்வா் ஸ்டாலின்
24 மொழிகளில் தமிழ்ப் பாடநூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்ப துறைக்கு அடித்தளம் அமைத்தது திமுக அரசுதான். தமிழ் இணையக் கல்விக் கழகம் நம்முடைய அறிவுச் சொத்துக்களை பாதுகாக்கும் பணியை சிறப்பாக செய்து வருகிறது. சென்னை அடையாறில் உள்ள டைடல் பார்க் திமுக அரசால் துவங்கப்பட்டது. உணர்வால், உள்ளத்தால், தமிழால் நாம் அனைவரும் இணைந்துள்ளோம்.
மொழியால் இணைந்தவர்களை சாதி, மதத்தால் பிரிக்க முடியாது. தமிழை பாதுகாத்துவிட்டோம், இனி தமிழை பரப்ப வேண்டிய காலம். அதனால்தான் தமிழ்ப் பரப்புரைக் கழகம் துவக்கியுள்ளோம். கடந்த ஒரு வருடத்தில் தமிழுக்கு எத்தனையோ தொண்டுகளை திமுக செய்துள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.