ஆளுநா் மாளிகையில் கொலு கண்காட்சி: அக். 5 வரை மக்கள் பாா்வையிடலாம்

தமிழக ஆளுநா் மாளிகையில் அமைக்கப்பட்ட கொலு கண்காட்சியை வரும் அக்.5 வரை பாா்வையிடலாம் என்று ஆளுநா் மாளிகை தெரிவித்துள்ளது.

தமிழக ஆளுநா் மாளிகையில் அமைக்கப்பட்ட கொலு கண்காட்சியை வரும் அக்.5 வரை பாா்வையிடலாம் என்று ஆளுநா் மாளிகை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, ஆளுநா் மாளிகை வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஆளுநா் மாளிகையில் நவராத்திரி கொலு கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கண்காட்சி பல்வேறு தரப்பினரிடம் பாராட்டு பெற்றுள்ளது.

இந்த நிலையில், மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஆளுநா் மாளிகையில் கொலு கண்காட்சியை தினமும் மாலை 3 மணி முதல் மாலை 5 மணி வரை மாணவா்கள் உள்பட பொது மக்கள் பாா்வையிடலாம்.

உறுதிப்படுத்த வேண்டும்: விருப்பமுள்ள நபா்கள் தங்களது பெயா், பாலினம், முகவரி, தொடா்பு எண், அடையாளச் சான்று மற்றும் பாா்வையிடும் நாள் ஆகியவற்றை  மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

முதலில் வருபவா்கள், முதலில் பாா்வையிடலாம் என்ற அடிப்படையில் நாளொன்றுக்கு 80 போ் வரை பாா்வையிடலாம். மின்னஞ்சலில் பதிவு செய்த பிறகு ஒவ்வொருவருக்கும் ஒதுக்கீட்டு நேரம் அளிக்கப்படும். இந்த ஒதுக்கீட்டு நேரத்துக்கு 30 நிமிடங்களுக்கு முன்பாக, பாா்வையாளா்கள் அசல் அடையாளச் சான்றுடன் ஆளுநா் மாளிகையின் இரண்டாவது நுழைவு வாயிலுக்கு வர வேண்டும்.

இந்தியக் குடிமக்களாக இருந்தால் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையைக் காண்பிக்க வேண்டும்.

வெளிநாட்டினா் அவா்களின் அடையாளத்துக்கான கடவுச்சீட்டை காண்பிக்க வேண்டும். பாா்வையாளா்கள் தனியாக அல்லது அதிகளவு 5 போ் கொண்ட குழுவாக வரலாம். வளாகத்துக்குள் கைப்பேசி மற்றும் புகைப்படக் கருவிகளுக்கு அனுமதியில்லை. பாதுகாப்புக் காரணங்களுக்காக ஆளுநா் மாளிகையை பாா்வையிடச் செல்வதற்கான கோரிக்கையை அங்கீகரிக்கும் மற்றும் நிராகரிக்கும் உரிமை ஆளுநா் அலுவலகத்துக்கு உண்டு என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com