அமித் ஷாவின் கருத்து ஒருமைப்பாட்டுக்கு வேட்டுவைக்கும்: முதல்வர் ஸ்டாலின்

ஆங்கிலத்திற்கு பதில் இந்தியை பயன்படுத்த அமித்ஷா கூறுவது ஒருமைப்பாட்டுக்கு வேட்டுவைக்கும் செயல் என்று முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஆங்கிலத்திற்கு பதில் இந்தியை பயன்படுத்த அமித்ஷா கூறுவது ஒருமைப்பாட்டுக்கு வேட்டுவைக்கும் செயல் என்று முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், "ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியைப் பயன்படுத்துங்கள்" என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சொல்வது இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் செயல்!

இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பழுதாக்கும் வேலையை பாஜக தலைமை தொடர்ந்து செய்கிறது. 

'இந்தி மாநிலம்' போதும், இந்திய மாநிலங்கள் தேவையில்லை என்று அமைச்சர் அமித்ஷா நினைக்கிறாரா?

ஒற்றை மொழி என்பது ஒற்றுமைக்கு உதவாது! ஒற்றைத்தன்மை என்பது ஒருமைப்பாட்டையும் உருவாக்காது!

ஒரே தவற்றைத் திரும்பத் திரும்பச் செய்கிறீர்கள். ஆனால் அதில் நீங்கள் வெற்றி பெற மாட்டீர்கள்!. இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com