அதிமுகவில் இருந்து தன்னை நீக்கியது செல்லும் என்ற சென்னை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன் என்று சசிகலா தெரிவித்துள்ளார்.
சசிகலாவை அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கி கடந்த 2017ல் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிராக, சசிகலா சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். தன்னை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது செல்லாது என்று அறிவிக்கக் கோரினார்.
இதனிடையே, சசிகலாவின் கோரிக்கையை நிராகரிக்கக் கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில், சசிகலாவின் கோரிக்கையை நிராகரித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து அதிமுக நீக்கியது செல்லும் என சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நாமக்கல் ஆஞ்சனேயர் கோயிலில் வழிபாடு செய்தார் சசிகலா
இதனிடையே, நாமக்கல் ஆஞ்சனேயர் கோயிலில் திங்கள் கிழமை நண்பகல் 1 மணியளவில் சசிகலா சுவாமி தரிசனம் மேற்கொண்டார். சுவாமிக்கு அர்ச்சகர் ராஜாபட்டர் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சசிகலா மனமுருகி வழிபாடு மேற்கொண்டார். அர்ச்சகர்கள் சசிகலாவுக்கு மாலை அணிவித்து பூஜைகளைச் செய்தனர். தொடர்ந்து கோயில் வளாகத்தை வலம் வந்தார்.
அப்போது, 'அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது செல்லும்' என சென்னை உரிமையியல் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பியபோது, சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன் என்றார்.
இதனைத் தொடர்ந்து திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு சேலம் மாவட்டத்தில் உள்ள முக்கிய கோயில்களுக்குச் சென்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கர - டிக்கெட் முன்பதிவு மந்தம்!
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30

துருவ நட்சத்திரம் வெளியீட்டுத் தேதி இதுவா?

கேரளத்தில் கனமழை! 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


