எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

எழுவர் விடுதலை விவகாரம்: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

பேரறிவாளன், நளினி உள்ளிட்ட எழுவர் விடுதலை தொடர்பான கோப்புகள் கடந்த ஆண்டே குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

News image
எழுவர் விடுதலை விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்
Updated On :21 ஏப்ரல் 2022, 1:04 pm

DIN

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன், நளினி உள்ளிட்ட எழுவர் விடுதலை தொடர்பான கோப்புகள் கடந்த ஆண்டே குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள பேரறிவாளன், நளினி உள்ளிட்ட எழுவரை விடுதலை செய்வது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றி தமிழக அரசு ஆளுநருக்கு அனுப்பியுள்ளது. 

இந்த தீர்மானத்தின் மீது தமிழக ஆளுநர் நடவடிக்கை எடுக்க காலதாமதம் செய்து வருவதாகவும், தமிழக சட்டப்பேரவையின் தீர்மானத்தின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது அரசியலமைப்பு எதிரானது எனவும் கூறி நளினி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த வழக்கு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்த நிலையில் எழுவர் விடுதலை தொடர்பான கோப்புகளை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய விவரங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

இதற்கு பதிலளித்த தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் எழுவர் விடுதலை தொடர்பான கோப்புகளை கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்ததாக தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை ஏப்ரல் 25ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.