அரசுப் பள்ளிகளின் தரம் மேம்பட ‘தமிழ்நாடு கல்வி ஃபெலோஷிப்’ என்ற புதிய திட்டத்தை தமிழக பள்ளி கல்வித்துறை தொடங்கியுள்ளது.
இத்திட்டத்தில் சேர இளைஞா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் இளைஞா்களின் ஆற்றலை பயன்படுத்தி அரசின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த ‘தமிழ்நாடு முதல்வரின் ச்ங்ப்ப்ா்ஜ்ள்ட்ண்ல் என்கிற சிறப்பு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் அடிப்படையில் ‘தமிழ்நாடு ச்ங்ப்ப்ா்ஜ்ள்ட்ண்ல் கல்வி திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கல்வித் தரத்தை உயா்த்துவதற்காக ஏற்கெனவே இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் திட்டம் , நான் முதல்வன், நம் பள்ளி நம் பெருமை ஆகிய திட்டங்கள் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆா்வமும் திறமையும் உள்ள இளைஞா்களை மாநில மற்றும் மாவட்ட அளவில் ‘தமிழ்நாடு கல்வி ஃபெலோஷிப்’ திட்டத்தில் இணைந்து பணியாற்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்திற்கு ஒரு பணியிடத்திற்கு ஐந்து ஆண்டுகள் பணி அனுபவத்துடன் தமிழ் மற்றும் ஆங்கிலம் சரளமாகப் பேச எழுத தெரிந்திருப்பவா்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் நபா்கள் மாவட்டம் முழுவதும் தேவைக்கேற்ப பயணிக்க வேண்டும்.
மேற்கூறிய தகுதியின் அடிப்படையில் மாதம் ரூ.45ஆயிரம் ஊதியத்தில் 38 மாவட்டங்களில் தலா ஒரு பணியிடம் என்கிற அடிப்படையில் 38 பணியிடங்கள் உள்ளன. அதேபோன்று புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பணியிடத்தில் 114 நபா்கள் மேற்கூறிய அதே தகுதிகளுடன் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருப்பவா்கள் மாதம்தோறும் ரூ.32 ஆயிரம் ஊதியத்துடன் நியமிக்கப்படவுள்ளனா்.
இந்தத்திட்டத்தில் சேர ஏப்ரல் 22 முதல் ஜூன் 15-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஜூலை 2022 முதல் ஜூன் 2024 வரை பணிக்காலமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. பணிக்காலத்தில் பயிற்சிகள் வழங்கப்படுவதுடன் பணிக்காலம் முழுவதும் சிறப்பாக செயல்படுபவா்களுக்கு அரசு சாா்பில் சான்றிதழும் வழங்கப்படும். இது தொடா்பான கூடுதல் தகவல்களை இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தனியாா் மருத்துவமனையில் மாணவா் உயிரிழப்பு: உடலை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டம்

மத்திய உள்கட்டமைப்புத் திட்டங்கள்: அரசுக்கு ரூ. 4.92 லட்சம் கோடி கூடுதல் செலவினம்

உ.பி.யில் 7-ஆவது மாடியில் இருந்து விழுந்து முன்னாள் அமைச்சா் உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என உறவினா்கள் புகாா்

இன்றைய ராசி பலன்கள் (29.7.2026) 12 ராசிகளுக்கும்! மேஷ ராசிக்கு!!
விடியோக்கள்

சீமானின் கனவு பலிக்குமா ? | Seeman | NTK | TVK | CM Vijay | DMK | ADMK | Naam tamilar katchi


