ஆடிப்பெருக்கு: புதுமண தம்பதிகள் காவிரியில் குடும்பத்துடன் வழிபாடு!

கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் காவிரி ஆற்றில் புதுமண தம்பதிகள் பெண்கள் ஆடிப்பெருக்கு விழாவை மிக விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். 
ஆடிப்பெருக்கு: புதுமண தம்பதிகள் காவிரியில் குடும்பத்துடன் வழிபாடு!

ஆடிப்பெருக்கு நாளையொட்டி தமிழகம் முழுவதும் நீர் நிலைகளில் புதுமண தம்பதிகள், பெண்கள் குழந்தைகள் என அனைவரும் சிறப்பாக கொண்டாடி வரக்கூடிய நிலையில், கடந்த 8 ஆண்டுகளாக காவிரி ஆற்றில் போதிய அளவுக்கு தண்ணீர் வராததாலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா பாதிப்பு காரணமாகவும் ஆடிப்பெருக்கு விழா என்பது கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டு வந்தது. 

இந்நிலையில், இந்த ஆண்டு காவிரியில் அதிக அளவு தண்ணீர் வருவதையொட்டி தஞ்சை மாவட்டத்தில் கல்லணை, திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு, கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் காவிரி ஆற்றில் புதுமண தம்பதிகள் பெண்கள் ஆடிப்பெருக்கு விழாவை மிக விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். 

புதுமண தம்பதிகள் தங்கள் திருமண தாலி மற்றும் திருமண மாலையை பிரித்து ஆற்றில் விட்டும், காவிரி தாய்க்கு பழங்கள், காய்கறிகள், அரிசி உள்ளிட்டவை வைத்து படையலிட்டு வழிபாடு செய்தும் ஆடிப்பெருக்கு விழாவை மிக சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். 

கடந்த பல ஆண்டுகளாக ஆற்றில் தண்ணீர் வராத நிலையில் தற்போது ஆற்றில் தண்ணீர் வருவதால் மிக சிறப்பாக கொண்டாடுவதாகவும் தெரிவிக்கின்றனர் புதுமண தம்பதிகள்.

காவிரி ஆற்றில் ஒரு லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் பல பகுதிகளில் காவிரி கொள்ளிடம் ஆற்றில் பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

மேலும், காவிரி கரையில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாட வருபவர்கள் பாதுகாப்பாக கொண்டாட வேண்டும் என காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com