ஜந்தர் மந்தர் போராட்டத்தில் காவலர்களால் பாலியல் சீண்டல்; 3 பெண் பத்திரிகையாளர்கள் புகார்!ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் சிறைப்பிடிப்பு! வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு - காங்கிரஸ்மூலனூர் வஞ்சியம்மன் கோயிலில் முதல்வர் விஜய் இன்று சாமி தரிசனம்?இந்திய விமானி ஸ்மித் மச்சாருடன் இஸ்ரேல் பிரதமர் உரையாடல்! உலக நாயகன் என புகழாரம்!தாராபுரம் பிரசாரம்: உதயநிதி மீது வழக்குப் பதிவு!தமிழ்நாட்டின் கடலோரத்தில் ஒரே நாளில் 500 மி.மீ. மழைப்பொழிவு ஏற்படலாம்! மதுராந்தகம், தாராபுரம் இடைத்தோ்தல் பிரசாரம் இன்று நிறைவு! கோவை, நீலகிரி, தேனியில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு

போதைப் பொருள் விற்றால் சொத்துகள் முடக்கம்: முதல்வர் ஸ்டாலின்

போதைப் பொருள்கள் விற்பவர்களை கைது செய்து அவர்களின் சொத்துகளை முடக்க வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Published On :

போதைப் பொருள்கள் விற்பவர்களை கைது செய்து அவர்களின் சொத்துகளை முடக்க வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

போதைப் பொருள் விழிப்புணர்வு தினம் நாளை கடைபிடிக்கவுள்ள நிலையில், சென்னை கலைவாணர் அரங்கில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் போதைப் பொருள் தடுப்பு மாநாடு நடைபெற்று வருகிறது. இதில், தலைமைச் செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபு, அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட கண்காணிப்பாளர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த கூட்டத்தில் தலைமை உரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

“தமிழகத்தில் நாளுக்கு நாள் போதை பொருள் பயன்படுத்துவோர் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. போதை மருந்துகள் நம் மாநிலத்திற்குள் வருவதை நாம் தடுக்க வேண்டும்.

போதை என்பது அதை பயன்படுத்தும் தனிநபர் பிரச்னை இல்லை, சமூகப் பிரச்னை.  தமிழகத்தில் போதைப் பொருள்கள் நுழைவதை முழு ஆற்றலை பயன்படுத்த வேண்டும்.

போதைப் பொருள்கள் தான் மத, சாதி மோதல்களை தூண்டுதலாக அமைந்துவிடுகிறது. போதைப் பொருள்கள் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை குற்றங்கள் நடக்க காரணமாக இருக்கிறது.

போதையின் பாதையில் செல்லும் ஒவ்வொருவரையும் தடுக்கும் கடமை நமக்கு இருக்கிறது. போதைப் பொருள் விற்பவர்களை கைது செய்து அவர்களின் சொத்துகளை முடக்க வேண்டும்.

தங்கள் குழந்தைகள் போதைப் பொருள்கள் பயன்படுத்துகிறார்களா என்று பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகள் அருகே போதைப் பொருள் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும்.

எல்லாவற்றிலும் வளரும் தமிழ்நாடு, போதைப் பொருள் போன்ற எதிர்மறை விஷயங்களிலும் வளர்ந்து விடக் கூடாது." எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.