முதல்வர் விஜய்யை பிரதமர் வேட்பாளர் என்று சொல்வது தொண்டர்களின் ஆர்வமிகுதி: திருமாவளவன்கரப்பான்பூச்சி கட்சியை ராஜிநாமா கட்சி என மாற்றியாக வேண்டும்: மத்திய அமைச்சர்தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ் இடங்கள்! பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி!2 நாள்களில் 9 கொலைகள்! இனியும் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்காமல்... உதயநிதி விமர்சனம்எதற்காகக் காத்திருக்கிறது ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் நிலையம்? மக்கள் வேதனைபோக்சோ வீரமணி வழக்கு! முதல்வர் விஜய், அமைச்சர்களை விசாரிக்க கோரி திமுக மனு!ஆபத்தில் ஜனநாயகம்; முழு வலிமையுடன் பாதுகாப்போம்! ராகுல் காந்திஞானேஷ் குமாரை பதவி நீக்க மனு: அடுத்த வாரம் விசாரணை! தலைமை நீதிபதி ஒப்புதல்!தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு!மினி பேருந்துகள் நாளை வழக்கம்போல் இயங்கும்!

வடபழனி நிதி நிறுவன கொள்ளை வழக்கு: மேலும் 2 பேர் வேலூரில் கைது

சென்னை வடபழனியில் தனியாா் நிதி நிறுவன கொள்ளை வழக்கில் மேலும் இரண்டு பேரை தனிப்படை போலீசார் வேலூரில் வைத்து கைது செய்துள்ளனர். 

Published On :


சென்னை வடபழனியில் தனியாா் நிதி நிறுவன கொள்ளை வழக்கில் மேலும் இரண்டு பேரை தனிப்படை போலீசார் வேலூரில் வைத்து கைது செய்துள்ளனர். 

வடபழனி மன்னாா் முதலி 1-ஆவது தெருவில் வசிக்கும் சரவணன், நிதி நிறுவனம் நடத்திவருகிறாா். கடந்த செவ்வாய்க்கிழமை இந்த நிதி நிறுவனத்துக்குள் புகுந்த 7 பேர் கொண்ட கும்பல், கத்திமுனையில் சரவணன் மற்றும் ஊழியா்களை மிரட்டி அங்கிருந்த ரூ.30 லட்சத்தை கொள்ளையடித்துக் கொண்டு தப்பியது.

நிதி நிறுவனக்கதவை பொதுமக்கள் உதவியுடன் தொடர்ந்து விரட்டியதில் கொள்ளையில் ஈடுபட்ட ஒருவா் மட்டும் பிடிபட்டாா்.

வடபழனி போலீஸாா் விசாரணையில், ஆழ்வாா் திருநகரைச் சோ்ந்த ரியாஸ் பாஷா (22) என்பதும், அவா் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவா் என்பதும் தெரியவந்தது.

நண்பா்கள் இஸ்மாயில், பரத், கிஷோா், ஜானி, தமிழ், மொட்டை ஆகியோருடன் கொள்ளையில் ஈடுபட்டிருப்பது தெரியந்தது.இதில் இருவா் கல்லூரி மாணவா்கள் என்பது தெரியவந்துள்ளது. கொள்ளையில் ஈடுபட்டவா்களை கைது செய்ய 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவா்களைக் கைது செய்ய ஆந்திரம்,கா்நாடகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளனா். மேலும் 6 பேரின் நண்பா்கள், குடும்பத்தினா் ஆகியோரிடம் விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். 

இந்நிலையில், சென்னையில் கிஷோர் கண்ணன் என்பவரை வியாழக்கிழமை தனிப்படை காவல்துறையினர் கைதான  நிலையில் 2 பேர் சரணடைந்தனர். இதையடுத்து இவ்வழக்கில் ரியாஸ் பாஷா, தமிழ்ச்செல்வன், கிஷோர் கண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், நிதிநிறுவன கொள்ளை வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த மேலும் இரண்டு பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். 

வேலூரில் வைத்து செய்யப்பட்டுள்ள தினேஷ், சந்தோஷ் ஆகிய இரண்டு பேரிடமும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.