ஆம்பூர் அருகே பாலாற்று தரைப்பாலம் 5வது முறையாக மூழ்கியது!

ஆம்பூர் அருகே பாலாற்று தரைப்பாலம் 5வது முறையாக வெள்ள நீரில் மூழ்கியதால் 25 கிராமங்களுக்கு செல்லக்கூடிய போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள நிலையில் ஆபத்தை உணராமல் செல்லும் பொதுமக்கள்.
ஆம்பூர் அருகே பாலாற்று தரைப்பாலம் 5வது முறையாக  வெள்ள நீரில் மூழ்கியதால் 25 கிராமங்களுக்கு செல்லக்கூடிய போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள நிலையில் ஆபத்தை உணராமல் செல்லும் பொதுமக்கள். 
ஆம்பூர் அருகே பாலாற்று தரைப்பாலம் 5வது முறையாக  வெள்ள நீரில் மூழ்கியதால் 25 கிராமங்களுக்கு செல்லக்கூடிய போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள நிலையில் ஆபத்தை உணராமல் செல்லும் பொதுமக்கள். 

ஆம்பூர் அருகே பாலாற்று தரைப்பாலம் 5வது முறையாக  வெள்ள நீரில் மூழ்கியதால் 25 கிராமங்களுக்கு செல்லக்கூடிய போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள நிலையில் ஆபத்தை உணராமல் இருசக்கர வாகனங்களில் செல்லும் பொதுமக்கள். 

மாண்டஸ் புயல் காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர்ந்து கடந்து மூன்று நாட்களாக பெய்து வரும் தொடர் மழையாலும், ஆம்பூர் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திர எல்லைப் பகுதிகளில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையால் ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் பகுதியில் ஆம்பூர் - குடியாத்தம் செல்லும் சாலையை இணைக்கும் பாலாற்று தரைப்பாலத்தை வெள்ளம் பெருக்கெடுத்து பாலாற்று தரைப்பாலம்  முழ்கடித்த நிலையில் வெள்ளம் சென்று கொண்டிருக்கிறது. 

இதனால் ஆம்பூரில் இருந்து குடியாத்தம் வழியாகச் செல்லும் பச்சகுப்பம், அழிஞ்சிகுப்பம், கொத்தகுப்பம், மேல்பட்டி, கீழ்பட்டி, வளத்தூர் செம்பேடு உள்ளிட்ட  25க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லகூடிய போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது மேலும் தமிழக ஆந்திர எல்லை பகுதியான தடுப்பணைகள் நிரம்பி உபரி நீரானது வெளியேறி தமிழக பாலாற்றில் கலந்து வருவதால் பாலாற்றில் வெள்ளம் அதிகரிக்க கூடும் என்பதால் ஆம்பூர் கிராமிய போலீசார் மற்றும் வட்டாட்சியர் மகாலட்சுமி தலைமையிலான வருவாய் துறையினர்  ஆபத்தை உணராமல் இருசக்கர வாகனங்களில் செல்லும் பொது மக்களுக்கு அறிவுரை வழங்கி திருப்பி அனுப்பப்படுகின்றனர். 

மேலும் பச்சகுப்பம்  பகுதியில் ஆம்பூர்-குடியாத்தம் இணைக்கும் தரைப்பாலம்  ஆனது இந்த ஆண்டில் மட்டும் ஐந்தாவது முறையாக தரைப்பாலம் மூழ்கடித்த நிலையில் வெள்ளம்  செல்வதால் 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஆம்பூர் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள  தொழிற்சாலைகளுக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர் இதனால்  உடனடியாக தமிழக அரசு தரைப்பாலத்தை மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com