எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மேட்டூர் உழவர் சந்தையில் 54 விவசாயிகளுக்கு புதிய அடையாள அட்டை! 

மேட்டூர் உழவர் சந்தையில் 54 விவசாயிகளுக்கு புதிய அடையாள அட்டை திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

News image
மேட்டூர் உழவர் சந்தையில் விவசாயிகளுக்கு புதிய அட்டைகளை வழங்கினார் வேளாண்மை துணை இயக்குநர் பாலசுப்பிரமணியம்.
Updated On :12 டிசம்பர் 2022, 5:25 am

DIN

மேட்டூ: மேட்டூர் உழவர் சந்தையில் 54 விவசாயிகளுக்கு புதிய அடையாள அட்டை திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

மேட்டூரில் உள்ள உழவர் சந்தைக்கு கொளத்தூர் ஒன்றியம் மேச்சேரி ஒன்றியம் மற்றும் நங்கவள்ளி ஒன்றியங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் விவசாய விலை பொருள்களையும், காய்கறிகளையும் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

திங்கள்கிழமை காலை மேட்டூர் உழவர் சந்தை நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் விவசாயிகளுக்கு பழைய அடையாள அட்டை புதுப்பித்தல் மற்றும் புதிய விவசாயிகளுக்கு புதிய அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவிற்கு வேளாண்மை துணை இயக்குநர் பாலசுப்பிரமணியம் தலைமை வகித்து விவசாயிகளுக்கு புதிய அட்டைகளை வழங்கினார். உழவர் சந்தை நிர்வாக அலுவலர் வரவேற்று பேசினார். விழாவில் 43 விவசாயிகளுக்கு பழைய அடையாள அட்டை புதுப்பித்து வழங்கப்பட்டது. புதியதாக விண்ணப்பித்த 14 விவசாயிகளுக்கு புதிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. 

மேலும், உழவர் சந்தையில் காய்கறிகளை விற்பனை செய்ய விரும்பும் விவசாயிகள் புதியதாக விண்ணப்பிக்கலாம். தகுதியின் அடிப்படையில் பரிசளித்து அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும் என்று வேளாண்மை துணை இயக்குநர் பாலசுப்ரமணியம் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.