தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 20,911 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று 17,934 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில், இன்று 20 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அடங்கிய தரவுகள் குறித்த பட்டியலை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அதில், இன்று 1,56,402 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், புதிதாக 20,911 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28,68,500-ஆக அதிகரித்துள்ளது.
புதிதாக 25 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 36,930-ஆக அதிகரித்துள்ளது.
புதிதாக 6,235 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், இதுவரை மொத்தமாக குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 27,27,960-ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்படுவோர் சதவிகிதம் 13.4%-ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று ஒரு நாளில் மட்டும் 8,218 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் மொத்த பாதிப்பு 6,16,959-ஆக அதிகரித்துள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 2,030 பேரும், கோவையில் 1,162 பேரும், திருவள்ளூரில் 901 பேரும், மதுரையில் 599 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குகி, நாகா சமூகங்களைச் சேர்ந்த 38 பேர் சிறைப்பிடிப்பு! - மணிப்பூர் அரசு அறிவிப்பு!

‘உடன்பிறப்பின் குரல்’.. தேர்தல் தோல்வி பற்றி திமுகவினரிடம் கருத்துக்கேட்கும் ஸ்டாலின்!

இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு கடும் வீழ்ச்சி!

பேரவைக்கு Bike-ல் வந்த மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ்!
விடியோக்கள்

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

எடப்பாடி பழனிசாமியின் உத்தரவு செல்லாது! பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும்! - S.P. Velumani பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

