தமிழகத்தில் புதிதாக 30,580 பேருக்கு கரோனா; 40 பேர் பலி

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 30,580 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 
தமிழகத்தில் புதிதாக 30,580 பேருக்கு கரோனா; 40 பேர் பலி

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 30,580 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் நேற்று 30,744 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது. 

கரோனா பாதிப்பு நிலவரம் குறித்த தரவுகளை மாநில சுகாதாரத் துறை அறிக்கை வாயிலான ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ளது. 

அதில், தமிழகத்தில் இன்று (ஜன.23) ஒரு நாளில் மட்டும் 1,57,732 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதிதாக 30,580 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 31,33,990-ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக 40 பேர் உயிரிழந்தனர். இதனால் கரோனாவால் பாதிக்கப்பட்டு இதுவரை மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37,218-ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 24,283 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் இதுவரை மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 28,95,818-ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்படுவோர் விகிதம் 19.4% ஆக குறைந்துள்ளது.

மாவட்ட வாரியாக பாதிப்பு:

சென்னையில் புதிதாக 6,383 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு 6,93,010-ஆக அதிகரித்துள்ளது. 

செங்கல்பட்டில் 1841, கோவையில் 3912, திருப்பூரில்  1507, தஞ்சாவூரில் 1,123, சேலத்தில் 1074, கிருஷ்ணகிரியில் 1010, திருச்சியில் 757, நாமக்கல்லில் 695,  திருநெல்வேலியில் 608, காஞ்சிபுரத்தில் 560 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com