நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: திமுக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) வெளியிட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: திமுக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு


நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) வெளியிட்டுள்ளது.

திமுக கடந்த சில நாள்களாகவே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான இடப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.

மாவட்ட நிர்வாகங்களே கூட்டணிக் கட்சிகளுடன் சுமுகமாகப் பேசி கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களைத் தவிர திமுக போட்டியிடும் இடங்களை முறைப்படுத்தி, அவற்றில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்ப் பட்டியலை ஜனவரி 31-ம் தேதிக்குள் கட்சித் தலைமைக்கு அனுப்பிட வேண்டும் என கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவுறுத்தியிருந்தார்.

இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை திமுக வெளியிட்டுள்ளது.

விழுப்புரம் மத்திய மாவட்டத்தின் கீழ் வரும் நகராட்சி, பேரூராட்சிகள், கும்பகோணம் மாநகராட்சி மற்றும் தஞ்சை வடக்கு மாவட்டத்தின் கீழ் வரும் பேரூராட்சிகள், தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தின் கீழ் வரும் நகராட்சி, பேரூராட்சிகள், காஞ்சிபுரம் மாநகராட்சி மற்றும் காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தின் கீழ் வரும் நகராட்சி, பேரூராட்சிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க
| நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: திமுக 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி 19-ம் தேதி நடைபெறுகிறது. பிப்ரவரி 23-இல் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

அதிமுக இதுவரை 3 கட்டமாக வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com