நீங்கள் விரும்பிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது: எடப்பாடி பழனிசாமி

நீங்கள் விரும்பிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று அதிமுக பொதுக்குழுவில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
நீங்கள் விரும்பிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது: எடப்பாடி பழனிசாமி
நீங்கள் விரும்பிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது: எடப்பாடி பழனிசாமி


சென்னை: நீங்கள் விரும்பிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று அதிமுக பொதுக்குழுவில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

உயர் நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில், சென்னை வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக செயற்குழுவும் அதனைத் தொடர்ந்து பொதுக்குழுவும் நடைபெற்றது.

பொதுக்குழுவில் நன்றி தெரிவித்து உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, மிக நீண்ட நன்றிகூறும் பட்டியலை வாசித்தார். அப்போது, அதிமுக தொண்டர்கள் எதிர்பார்த்த தீர்மானத்தையும் பொதுக்குழு உறுப்பினர்கள் எதிர்பார்த்த தீர்மானத்தையும் நிறைவேற்றித் தந்த நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், அதிமுக பொதுக்குழு மிகச் சிறப்பாக அமைவதற்கு உழைத்த தலைமைக் கட்சி நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பொதுக்குழுவில், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவி ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

சில எட்டப்பர்கள் அதிமுகவிற்கு களங்கம் கற்பிக்கின்றனர். அந்த எட்டப்பர்கள் எதிரிகளோடு உறவை வைத்துக் கொண்டுள்ளனர்.

கடந்த 1974ஆம் ஆண்டு அதிமுகவில்  கிளைக் கழக செயலாளராக நியமிக்கப்பட்டேன். இன்று அதிமுக கட்சியை காக்க இடைக்கால பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளேன். கட்சியில் இணைந்து, ஜெயலலிதாவின் எண்ண ஓட்டத்தை அறிந்து, கட்சிப் பணியாற்றி பொறுப்புக்கு வந்தேன். 

அதிமுகவை எந்த கொம்பனாலும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது. அது நடவடிக்கை கானல் நீராகத்தான் போகும். 31 ஆண்டு காலம் தமிழகத்தை ஆண்ட பெருமை அதிமுகவுக்கு உண்டு என்றும் இபிஎஸ் பேசினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com