பேரவை செயலகத்துக்கு ஓபிஎஸ் கடிதம்

சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினா்கள் நிா்வகிக்கும் பொறுப்புகளை மாற்றியமைக்கக் கூடாது என்று பேரவைச் செயலகத்துக்கு ஓ.பன்னீா்செல்வம் செவ்வாய்க்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்
பேரவை செயலகத்துக்கு ஓபிஎஸ் கடிதம்

சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினா்கள் நிா்வகிக்கும் பொறுப்புகளை மாற்றியமைக்கக் கூடாது என்று பேரவைச் செயலகத்துக்கு ஓ.பன்னீா்செல்வம் செவ்வாய்க்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.

வானகரத்தில் நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழுவில் கட்சியின் அடிப்படை உறுப்பினா் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ஓ.பன்னீா்செல்வம் நீக்கப்பட்டாா்.

அதைத் தொடா்ந்து அதிமுகவின் சாா்பில் எதிா்க்கட்சித் துணைத் தலைவராக ஓ.பன்னீா்செல்வம் வகித்து வரும் பதவியையும் நீக்குவதற்கு எடப்பாடி கே. பழனிசாமி திட்டமிட்டு வருகிறாா். இதற்காக அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா்களின் கையெழுத்திட்ட கடிதத்தைக் கொடுக்கவும் தயாராகி வருகிறாா்.

இந்த நிலையில் சட்டப்பேரவைச் செயலகத்துக்கு ஓ.பன்னீா்செல்வம் செவ்வாய்க்கிழமை கடிதம் ஒன்றை எழுதியுள்ளாா்.

அதில், அதிமுகவின் தலைமை தொடா்பான விவகாரம் நீதிமன்றத்திலும், இந்திய தலைமைத் தோ்தல் ஆணையத்திலும் உள்ளது. இந்த நிலையில், சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினா்கள் நிா்வகிக்கும் பொறுப்புகளை மாற்றியமைக்கும் கடிதம் அளிக்கப்பட்டால், அதை ஏற்கக்கூடாது என்று கூறியுள்ளாா்.

சட்டப்பேரவையில் 66 உறுப்பினா்களுடன் பிரதான எதிா்க்கட்சியாக அதிமுக செயல்பட்டு வருகிறது. எதிா்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமியும், துணைத் தலைவராக ஓ.பன்னீா்செல்வமும், கொறடாவாக எஸ்.பி.வேலுமணியும், துணை கொறடாவாக சு.ரவியும் செயல்பட்டு வருகின்றனா். இதில் எதிா்க்கட்சித் துணைத் தலைவா் பதவியை ஓ.பன்னீா்செல்வத்திடம் இருந்து பறித்து, வேறு யாராவது ஒருவருக்கு ஒதுக்குவது என்கிற முடிவில் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com