3 நாள் லேபிள் மேளா ஈரோடு ஈடிசியாவில் துவங்கியது

ஈரோடு மாவட்ட சிறு தொழில் சங்கம் மற்றும் தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை இணைந்து ஈடிசியா அலுவலகத்தில் மூன்று நாள் லேபிள் மேளா நிகழ்ச்சி தொடங்கியது.
3 நாள் லேபிள் மேளா ஈரோடு ஈடிசியாவில் துவங்கியது

ஈரோடு மாவட்ட சிறு தொழில் சங்கம் மற்றும் தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை இணைந்து ஈடிசியா அலுவலகத்தில் ஈரோடு மாவட்ட உணவு உற்பத்தியாளர்களும், உணவு வணிகர்களும் பயன்பெறும் வகையில் மூன்று நாள் லேபிள் மேளா நிகழ்ச்சி துவங்கியது. சங்கத் தலைவர் திருமூர்த்தி, செயலாளர் ராம்பிரகாஷ் நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தனர். 

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: 

உணவு சார் உற்பத்தி லேபிள்களில் உள்ள விவரங்களை சரி செய்யவும், சரியான விவரங்கள் அடங்கிய லேபிள்களை வடிவமைப்பதற்கும், உணவுப் பாதுகாப்பு சட்டத்தில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள லேபிள் விதிகள் குறித்து தெரிந்துகொள்ளவும் இந்த மூன்று நாட்களிலும் நடைபெறும் லேபிள் மேளா மிகவும் உறுதுணையாக இருக்கும். லேபிள்கள் சட்டத்தில் பல புதிய திருத்தங்களை மத்திய அரசு கடந்த ஜனவரியில் கொண்டு வந்தது. 

இது குறித்து விழிப்புணர்வு உணவுப் பொருட்கள் உற்பத்தியாளர் மற்றும் வியாபாரிகளிடம் இல்லை. சைவ மற்றும் அசைவ பொருட்களுக்கு தகுந்த மாதிரி லேபிள்கள் வடிவமைக்கப்பட வேண்டும். லேபிள்கள் பொருள்களின் எடை அல்லது கொள்ளளவுக்கு ஏற்ப இருக்க வேண்டும் உணவுப் பொருட்கள் உள்ள பாக்கெட்டுகளில் மீது நுகர்வோருக்கு நன்கு தெரிந்த அளவில் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்களின் எடை அளவு அல்லது எண்ணிக்கை குறிப்பிடவேண்டும். 

என்னென்ன பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது அதன் ஊட்டச்சத்து விபரங்கள் தயாரிக்கப்பட்ட தேதி பயன்படுத்த இறுதி தேதி போன்றவைகள் பாக்கெட்டில் சரியாக பதியப்பட வேண்டும். உணவுப் பொருட்களைப் பாக்கெட் செய்ய100 மைக்ரான் தரத்திலான பிளாஸ்டிக் பேப்பர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் இதே போன்று குறிப்பிட்ட தரத்தில் உள்ள பிளாஸ்டிக் பாக்கெட்டுகளை மட்டுமே உணவுப் பொருள் விற்பனையில் பயன்படுத்த வேண்டும். 

இந்த பாக்கெட் மற்றும் லேபில் தரநிர்ணயம் பிஸ்கட் கேக் உட்பட அனைத்து உணவுப் பொருட்களுக்கும் பொருந்தும் சாதனமாக லேபிள்கள் மற்றும் பாக்கெட்டுகளில் தங்கள் விருப்பம்போல் உற்பத்தியாளர்கள் பல வண்ணங்களிலும் பல அளவுகளில் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக குடிசைத்தொழில் உணவுப் பொருள்கள் உற்பத்தி செய்பவர்களுக்கு லேபிள் குறித்து புதிய சட்ட விதிகள் தெரியவில்லை அதற்காகத்தான் இந்த விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. 

உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ரூபாய் மூவாயிரத்துக்கும் மேல் ஒரு நாளைக்கு வணிகம் புரியும் உணவு சம்பந்தப்பட்ட வியாபாரிகள் லைசன்ஸ் பெற வேண்டும். உணவு பாதுகாப்பு கண்காணிப்பாளர்களை பணியில் அமர்த்த வேண்டும். அதற்கு கீழ் வர்த்தகம் செய்பவர்கள் உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உள்ள உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும். ஓட்டல்கள் டீக்கடைகள் ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடாது. இந்த பயன்படுத்திய எண்ணெய்யை உணவு பாதுகாப்புத்துறை வாங்கிக் கொள்கிறது. இது குறித்தெல்லாம் இந்த மூன்று நாள் லேபிள் மேளாவில் வணிகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் இவ்வாறு அவர்கள் கூறினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com