பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

தமிழ்நாட்டில் யாருக்கும் குரங்கு அம்மை இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் யாருக்கும் குரங்கு அம்மை தொற்று இல்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 3:22 pm IST

தமிழகத்தில் யாருக்கும் குரங்கு அம்மை தொற்று இல்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

சென்னையில் கரோனா தடுப்பூசி முகாம்களை பார்வையிட்ட பின் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த போட்டியில், தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் முகாம்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னையில் மட்டும் 2 ஆயிரம் இடங்களில் முகாம் அமைத்து தடுப்பூசி செலுத்தப்படுகிறது. 

தமிழகத்தில் யாருக்கும் குரங்கு அம்மை தொற்று இல்லை. குரங்கு அம்மை பரவலை தடுக்க கண்காணிப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விமான நிலையங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. செஸ் ஒலிம்பியாட் வீரர்கள் தங்குவதற்கு 24 விடுதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

இந்தியாவை பொறுத்தவரை கேரளத்தைச் சேர்ந்த 3 பேர், தில்லியில் ஒருவருக்கு என இதுவரை 4 பேருக்கு குரங்கு அம்மை உறுதியாகியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.