செஸ் ஒலிம்பியாட்: நாளை மாலை 5.30-க்கு தொடக்கம்; பாதுகாப்பு தீவிரம்

நாடு முழுவதும் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நாளை மாலை 5.30 மணிக்கு தொடங்கவுள்ளது. 
செஸ் ஒலிம்பியாட்: நாளை மாலை 5.30-க்கு தொடக்கம்; பாதுகாப்பு தீவிரம்

நாடு முழுவதும் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நாளை மாலை 5.30 மணிக்கு தொடங்கவுள்ளது. 

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த போட்டியின் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ளவுள்ளார். 

இதற்காக நாளை மாலை 5 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி சென்னை விமான நிலையம் வருகிறார். அதனைத் தொடர்ந்து ராஜாமுத்தைய்யா சாலையில் அமைந்துள்ள நேரு உள்விளையாட்டரங்கிற்கு அவர் வருகைத் தரவுள்ளார். இதற்காக சென்னையில் சில இடங்களில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 187 நாடுகளைச் சோ்ந்த 2,000-க்கும் மேற்பட்ட வீரா், வீராங்கனைகள், நடுவா்கள், பயிற்சியாளா்கள் பங்கேற்க உள்ளனா். இந்தப் போட்டிகள் அனைத்தும் நேரலையிலும் ஒளிபரப்பப்பட உள்ளது.

சென்னை ராஜாமுத்தைய்யா சாலையில் அமைந்துள்ள நேரு உள் விளையாட்டரங்கத்தில் மாலை 5.30 மணிக்கு நிகழ்ச்சி தொடங்குகிறது.

இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், தகவல் மற்றும் ஒலிபரப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். இதனையொட்டி காவல் துறையினர் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். அசம்பாவிதங்கள் நடைபெறுவதைத் தவிர்க்கும் வகையில், அப்பகுதிகளையொட்டி காவல் துறையின் ரோந்து வாகனங்களும் அதிகரிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

போக்குவரத்து மாற்றம்:

செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்ச்சி மற்றும் மோடி வருகையையொட்டி, நாளை (ஜூலை 28) நண்பகல் முதல் இரவு 9 மணிவரையில் இராஜா முத்தைய்யாச் சாலை, ஈவெரா பெரியார் சாலை, மத்தியச் சதுக்கம், அண்ணாசாலை மற்றும் சுற்றியுள்ளப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.

தேவை ஏற்படின் டிமலஸ் சாலை சந்திப்பிலிருந்து வாகனங்கள் இராஜா
முத்தைய சாலை வழியாக அனுமதிக்கப்படமாட்டாது.

ஈவிகே சம்பத் சாலை ஜெர்மயா சாலை சந்திப்பிலிருந்து இராஜா முத்தையா சாலை நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது.

வணிக நோக்கிலான வாகனங்கள் ஈவெரா சாலை கெங்குரெட்டி சாலை சந்திப்பு, நாயர் பால சந்திப்பு, காந்தி இர்வின் சந்திப்பிலிருந்து சென்ட்ரல் நோக்கி செல்ல அனுமதிக்கப்படமாட்டாது.

அதுபோன்றே பிராட்வேயிலிருந்து வருகின்ற வணிக நோக்கிலான வாகனங்கள் குறளகம், தங்கசாலை, வால்டாக்ஸ் சாலை வழியாக மூலக்கொத்தளம் நோக்கித் திருப்பிவிடப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com