பள்ளி நாள்கள் தவிர விடுமுறை நாள்களில் வகுப்புகள் கூடாது என்று பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் பள்ளிகளில் வகுப்புகள் தொடங்கப்பட்டன. கடந்த இரண்டு ஆண்டுகளைப் போல் அல்லாமல் வழக்கமான முறையில் பள்ளிகள் இயங்கப்படும் என்றும் அதுபோல சனிக்கிழமை வகுப்புகள் இயங்காது, விடுமுறை விடப்படுவதாக பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், சனிக்கிழமை சில பள்ளிகளில் வகுப்புகள் இயங்கப்படுவதாக புகார் எழுந்ததையடுத்து, பள்ளிக்கல்வித் துறை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மாணவர்களை பள்ளிகளுக்கு வரவழைக்க கூடாது, மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.
விடுமுறை நாள்களில் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்க கூடாது, பள்ளி வேலை நாட்களில் மட்டுமே மாணவர்கள் வர வேண்டும் என்று கூறியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜியோ விண்ணப்பத்தைத் தொடர்ந்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 1% உயர்வு!
வாட்ஸ் ஆப் நிறுவனத்தின் புதிய தலைவரான இந்தியர்!

முதல்வர் விஜய் பிறந்த நாள்! இன்றைய செய்திகள் ஜூன் 22 - நேரலை!

உற்பத்தித் திறனை ஆண்டுக்கு இரட்டிப்பாக்க இலக்கு: வேதாந்தா அலுமினியம்
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |




