பாடலாத்ரி நரஸிம்மர் கோயிலில் வைகாசி பிரம்மோற்ஸவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்

செங்கல்பட்டை அடுத்த சிங்கப்பெருமாள் கோயில் பாடலாத்ரி நரஸிம்ம ஸ்வாமி கோயிலில் 15 நாள் மிகச் சிறப்பாகக் கொண்டாடக் கூடிய வைகாசி பிரம்மோற்சவம் வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பாடலாத்ரி நரஸிம்மர் கோயிலில் வைகாசி பிரம்மோற்ஸவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்

செங்கல்பட்டை அடுத்த சிங்கப்பெருமாள் கோயில் பாடலாத்ரி நரஸிம்ம ஸ்வாமி கோயிலில் 15 நாள் மிகச் சிறப்பாகக் கொண்டாடக் கூடிய வைகாசி பிரம்மோற்சவம் வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

செங்கல்பட்டை அடுத்த சிங்கப்பெருமாள் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஸ்ரீ பாடலாத்ரி நரசிம்மர் கோயில் உள்ளது. இக்கோயிலில் நரசிம்ம சுவாமி உக்கிரத்துடன் நாடி வரும் பக்தர்களுக்கு வேண்டும் வரம் அருளும் சுவாமியாக அமர்ந்த கோலத்தில் காட்சி அளிக்கிறார். இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி பிரம்மோற்சவம் நடைபெறும்.

இந்த ஆண்டு வெள்ளிக்கிழமை காலை துவாஜரோஹணம், புண்ணியகோடி விமானம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. மாலை ஸிம்ம வாகனம், ஜூன் 4ந் தேதி இரண்டாம் நாள் சனிக்கிழமை காலை சூரிய பிரபை மாலை ஹம்ச வாகனம், ஜூன் 5 ந்தேதி மூன்றாம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை கருட சேவை மாலை அனுமந்த வாகனம் , ஜுன் 6ந்தேதி நான்காம் நாள் திங்கள் கிழமை காலை சேஷ வாகனம் ஏகாந்த சேவை மாலை சந்திர பிரபை ஜூன் 7ந்தேதி 5ம் நாள் செவ்வாய்க்கிழமை காலை நாச்சியார் திருக்கோலம் மாலை யாழி வாகனம் வானவேடிக்கையுடன் புறப்பாடு, ஜூன் 8ந்தேதி ஆறாம் நாள் புதன்கிழமை காலை சூர்ணாபிஷேகம் மாலை யானை வாகனம், 

ஜூன் 9ந்தேதி ஏழாம் நாள் வியாழக்கிழமை காலை திருத்தேர் உற்சவம் மாலை சன்னதி விசேஷ திருமஞ்சனம் தேர்முட்டி மண்டகப்படி இரவு அனுமார்சன்னதி வரை பெருமாள் எழுந்தருளள், ஜூன்10ந்தேதி எட்டாம் நாள் வெள்ளிக்கிழமை காலை பல்லக்கு மாலை குதிரை வாகனம் இரவு புஷ்ப பள்ளியறை ஜோடிப்பு, ஜூன் 11ந்தேதி ஒன்பதாம் நாள் சனிக்கிழமை காலை தீர்த்தவாரி பல்லக்கு தீர்த்தவாரி திருமஞ்சனம் புஷ்பப் மாலை புஷ்பப் பல்லக்கு அவரோஹனம், ஜூன் 12ந்தேதி பத்தாம் நாள் ஞாயிற்றுக்கிழமை துவாத சாராதனம் திருமஞ்சனம் மாலை தங்க தோளுக்கினியால் உற்சவமும் ஜூன் 13 ஆம் தேதியிலிருந்து 17-ஆம் தேதி வரை ஐந்து நாட்களும் விடையாற்றி உற்சவம் நடைபெற உள்ளது. 

விழா கொடியேற்றத்தையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மகா தீபாராதனை நடைபெற்றது. இதனையடுத்து உற்சவ மூர்த்தி சிறப்பு அலங்காரத்தில் கொடி மரத்தடியில் காட்சி அளிக்க கொடியேற்றம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் வெங்கடேசன், மேலாளர் தமிழ்ச்செல்வன், கோயில் பணியாளர்கள் பட்டாச்சாரியார்கள் விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com