புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

தமிழகத்தில் மேலும் 105 பேருக்கு கரோனா: சென்னையில் 61

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 105 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.    

News image
Updated On :4 ஜூன் 2022, 2:14 pm

DIN

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 105 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.     

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட தரவுகள் அடங்கிய விவரங்களை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. அதில், இன்று புதிதாக 105 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 61 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

இதனால் மொத்த பாதிப்பு 34,55,976-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி புதிதாக உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை. இதனால் மொத்த உயிரிழப்பு 38,025 ஆக உள்ளது. கரோனாவிலிருந்து ஒரேநாளில் மேலும் 62 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  

இதனால் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 34,17,152-ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 12,731 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது நிலவரப்படி 799 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த மாா்ச் 13-ஆம் தேதி 100-க்கும் கீழ் பாதிப்பு குறைந்தது. அதன் பின்னா் அது படிப்படியாக குறைந்தே வந்தது. ஏப்ரல் 15-இல் 22 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில், தற்போது அது மீண்டும் அதிகரித்து வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.