விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த அமமுக ஈரோடு மாவட்டச் செயலாளர்

முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் முன்னிலையில் அமமுக ஈரோடு மாநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் திமுகவில் இணைந்தார்.

News image
Updated On :5 ஜூன் 2022, 2:31 pm

DIN

முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் முன்னிலையில் அமமுக ஈரோடு மாநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் திமுகவில் இணைந்தார்.

இதுகுறித்து திமுக தலைமைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில், முதல்வர், திமுக தலைவர் முன்னிலையில், இன்று அண்ணா அறிவாலயத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில், ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளரும் – வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமியின் வழிகாட்டுதலில் ஈரோடு தெற்கு மாவட்டம், அ.ம.மு.க. கட்சியைச் சேர்ந்த  ஈரோடு மாநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் சக்தி (எ) சிவசுப்பிரமணியன், Ex.M.C., தலைமையில் மாவட்ட அம்மா தொழிற்சங்க பேரவை செயலாளர் பெஸ்ட் கே.சிவகுமார், மாவட்ட இளம்பெண்கள் பாசறை செயலாளர் பி.கலைச்செல்வி, மாவட்ட பொறியாளர் அணி செயலாளர் ஆர்.வி.தனுஷ், பகுதிச் செயலாளர்கள் கொல்லாம்பாளையம் எம்.அன்னபூரணி, திண்டல் ஏபி.தனவர்ஷன், மாணிக்கம்பாளையம் கே.என்.செல்வராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.எம்.விக்னேஷ், மாவட்ட தகவல்தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளர் (பொறுப்பு) ஆர்.வினோத்குமார் ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர். 

அதுபோது கட்சிப் பொதுச்செயலாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு மற்றும் ஈரோடு தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கே.ஈ.பிரகாஷ் ஆகியோர் உடனிருந்தனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.