சென்னை: அரசு கட்டடங்களின் முகப்புத் தோற்ற வரைபடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
தமிழகத்தில் பொதுப்பணித் துறையால் கட்டப்படவுள்ள அரசு பள்ளிக் கட்டடம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மாணவ-மாணவியர் தங்கும் விடுதி, சார்பதிவாளர் அலுவலகம், நகர் ஊரமைப்பு இயக்குநர் அலுவலகம் ஆகிய கட்டடங்களின் முகப்புத் தோற்ற வரைபடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
அக்கட்டடங்களின் வரைபடம், பயன்பெறும் துறைகளை கலந்தாலோசித்து தற்போதைய தேவைக்கேற்றவாறு மாற்றி அமைத்து நவீன முகப்பு தோற்றத்துடன் பொதுப்பணித் துறையால் தயாரிக்கப்பட்டுள்ளது.
பொதுப்பணித் துறையால் கட்டப்படவுள்ள அரசு பள்ளிக் கட்டிடம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் போன்ற கட்டிடங்களின் புதிய முகப்புத் தோற்ற வரைபடத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.
இந்நிகழ்வின்போது, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.