47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால்: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

சென்னை பிராட்வேயில் உள்ள சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால், தலைமைச் செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்று சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

News image
சென்னை உயர்நீதிமன்றம்
Updated On :11 ஜூன் 2022, 10:42 am

DIN


சென்னை: சென்னை பிராட்வேயில் உள்ள சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால், தலைமைச் செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்று சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

சென்னை பிராட்வேயில் ஆக்கிரமிப்புகளை அகற்றாதது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், சென்னை பிராட்வேயில் உள்ள என்எஸ்சி போஸ் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்யும் போது பணியில் இருந்த தலைமைச் செயலர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும் என்று எச்சரித்தனர்.

என்எஸ்சி போஸ் சாலையில் உள்ள வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்க சென்னை மாநகராட்சி சார்பில் மேலும் 2 மாதம் கால அவகாசம் கோரப்பட்டதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.