1-12 வகுப்பு வரை முழு பாடங்களையும் நடத்த உத்தரவு: பள்ளிக்கல்வித் துறை

1-12 வகுப்பு வரை முழு பாடங்களையும் நடத்த பள்ளிக்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: 1-12 வகுப்பு வரை முழு பாடங்களையும் நடத்த பள்ளிக்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டுகளில் குறைக்கப்பட்ட பாடங்களையும் சேர்த்து முழுமையாக நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கரோனா காரணமாக 2 ஆண்டுகளாக பாடங்கள் குறைத்து நடத்தப்பட்ட நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 10-ம் வகுப்புக்கு 39%, 11, 12-ம் வகுப்புகளுக்கு 35%, 1-9-க்கு வகுப்புகளுக்கு 50% பாடங்கள் குறைக்கப்பட்டு இருந்தன.

வகுப்பறைக்கு மாணவர்கள் கொண்டுவரும் செல்லிடை பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டால் திரும்ப தரப்படாது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

மேலும்,  மாணவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ் தரமறுக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் மற்றும் வரும் கல்வியாண்டில் 9,494 ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்படவுள்ளனர் என்று அமைச்சர் கூறியுள்ளார்.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com