ஜூன் 23-ல் மேக்கேதாட்டு குறித்து விவாதிப்போம்: காவிரி ஆணையம்

ஜூன் 23ல் நடைபெறும் கூட்டத்தில் மேக்கேதாட்டு குறித்து கண்டிப்பாக விவாதிப்போம் என்று காவிரி மேலாண்மை ஆணையத்தின் குழுத் தலைவர் ஹல்தர் தெரிவித்துள்ளார். 
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

ஜூன் 23ல் நடைபெறும் கூட்டத்தில் மேக்கேதாட்டு குறித்து கண்டிப்பாக விவாதிப்போம் என்று காவிரி மேலாண்மை ஆணையத்தின் குழுத் தலைவர் ஹல்தர் தெரிவித்துள்ளார். 

தஞ்சை கல்லணையில் ஆய்வு செய்த அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், காவிரி மேலாண்மை ஆணையம் சுதந்திரமான அமைப்பு. மேக்கேதாட்டு உள்ளிட்ட அணை விவகாரங்கள் குறித்து விவாதிக்க ஆணையத்திற்கு முழு அதிகாரம் உள்ளது. 

நாங்கள் எந்த மாநிலத்திற்கும் ஆதரவாக இல்லை. யாரும் எங்களை நிர்பந்திக்க முடியாது. காவிரி ஆணைய கூட்டத்தில் மேக்கேதாட்டு குறித்து விவாதிக்க எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் குழுத் தலைவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

மேக்கேதாட்டில் அணை கட்டுவதற்காக கா்நாடக அரசு முழு வீச்சில் முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்கு தமிழக அரசு எதிா்ப்பு தெரிவித்து வரும் நிலையில், புது தில்லியில் வெள்ளிக்கிழமை (ஜூன் 17) நடைபெறுவதாக இருந்த காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16 ஆவது கூட்டம் ஜூன் 23ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com