சௌமியா அன்புமணி தருமபுரி தொகுதியில் போட்டி!தங்கம் விலை மீண்டும் குறைவு! இன்றைய நிலவரம்! நாக்பூர் அருகே தடம்புரண்ட மெமு ரயில்! குவைத்தில் மின் உற்பத்தி நிலையம் மீது ஈரான் தாக்குதல்: இந்தியர் பலி 1,100-க்கும் அதிக போலி வெடிகுண்டு மிரட்டல்கள்: மைசூரைச் சேர்ந்தவர் கைது ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?
/

பிரதமரின் தாயாருக்கு 100ஆவது பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென்னின் 100ஆவது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

News image
Updated On :18 ஜூன் 2022, 1:40 pm

DIN

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென்னின் 100ஆவது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், அன்புள்ள நரேந்திர மோடியே, தங்கள் தாயார் இன்று தமது நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார் என்று அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

தாய் மீதான தங்கள் பாசத்தை நான் நன்கறிவேன். ஒவ்வொரு முறை சென்னை வரும்போதும் எனது தாயாரின் உடல்நலன் குறித்து தாங்கள் விசாரிப்பதை இவ்வேளையில் நினைவுகூர்கிறேன்.

இந்தச் சிறப்பான நாளில், தங்கள் தாயாருக்கும் தங்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.